அயோத்தி ராமர் கோவில் மக்கள் நன்கொடை கொண்டே கட்டப்படும்: அறக்கட்டளை நிர்வாகி


அயோத்தியில் பிரமாண்டமாய் அமையும் ராமர் கோவில், நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலம் தான் கட்டப்படும் என அறக்கட்டளை நிர்வாகி சம்பத் ராய் கூறியுள்ளார். 

இதற்காக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா, நிதி பங்களிப்பு பிரசாரத்தை நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ளது. 

மக்கள் தாங்களாக முன்வந்து வழங்கும் நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக 10, 100 மற்றும் 1,000 ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 10 ரூபாய்க்கான கூப்பன்கள் 4 கோடியும், 100 ரூபாய்க்கான கூப்பன்கள் 8 கோடியும், ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் 12 லட்சமும் அச்சிடப்பட்டுள்ளன. 

Also Read  கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.

இந்த நிதி பங்களிப்பு பிரசாரத்தின் போது, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், “ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது. ஏனெனில் அதற்கான எந்த ஒப்புதலையும் அறக்கட்டளை பெறவில்லை” என சம்பத் ராய் கூறினார். 

Also Read  பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

அவர் மேலும் கூறுகையில், “நிதி சேகரிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை, கோயில் கட்டுமானத்திற்கான செலவினங்கள் குறித்து எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை. இந்த பிரச்சாரத்தின் மூலம், ராம் ஜன்மபூமி இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

இந்தியாவில் 45 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை

Tamil Mint

ஓலா மின்சார ஸ்கூட்டர் – 2 நாளில் ரூ.1,100 கோடியை தாண்டிய விற்பனை…!

Lekha Shree

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint

“மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Lekha Shree

ஊரடங்கு காலத்தில் நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கிய ஒடிசா அரசு!

Shanmugapriya

உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

Shanmugapriya

ஜனவரி 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan