மம்மூட்டியுடன் இணையும் ரம்யா பாண்டியன்..!


எப்போதும் நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியன் அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜோக்கர்’ திரைப்ப்டத்தின் மூல அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இதனிடையே சமூக வலைதளத்தில் சேலையில் நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் நடத்தி ஒரே நாளில் வைரலானார். இதனைத் தொடர்ந்து மிகவும் பிரபலமாக ஆனது மட்டுமல்லாமல் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூக வலைத்தள ரசிகர்களை தாண்டி குடும்பங்களை ஈர்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ரம்யா பாண்டியன்.

Also Read  பாலாவின் இயக்கத்தில் இணையும் சூர்யா-அதர்வா?

இந்நிலையில், பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா பாண்டியன்.

https://www.instagram.com/p/CXIWffuvjDK/?utm_source=ig_web_copy_link

இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மம்முட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரம்யா பாண்டியன் உறுதி செய்துள்ளார்.

Ramya pandian acting with malayalam super star officially announced

இப்படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது.

Also Read  நெட்பிளிக்ஸின் டாப் 10 படங்கள் வரிசையில் இடம்பிடித்த 'மின்னல் முரளி' …!

மம்மூட்டி மற்றும் ரம்யா பாண்டியன் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை யார்!

suma lekha

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint

‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘அடிபொலி’ பாடலை புகழ்ந்த மோகன்லால்…!

Lekha Shree

யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Lekha Shree

’வாய்ப்பு கிடைச்சா இத செய்வேன்’… சமந்தா குறித்து பிரபல ஹிந்தி நடிகர் பதில்..!

suma lekha

ரஜினி, விஜய், அஜித் பற்றி மனம்திறந்த பிரபல நடிகை…!

Lekha Shree

2வது முறையாக தாயான கரீனா கபூர்… என்ன குழந்தை தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! – என்ன சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

suma lekha

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree