a

நடிகர் விஷாலின் புகார் – கூலாக பதில் சொன்ன ஆர்.பி. சவுத்ரி..!


நடிகர் விஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தி நகரில் உள்ள காவல்துறை இணை ஆணையரிடம் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் தான் வாங்கிய கடனை திருப்பி கொடுத்த பின்னரும் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தான் கொடுத்த ஆவணங்களைத் திருப்பி தர மறுப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Also Read  பறை இசைக்கு செம்ம ஆட்டம் போடும் சந்தோஷ் நாராயணன்… வைரல் வீடியோ இதோ..!

இந்நிலையில் விஷாலின் புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறுகையில், “இரும்புத்திரை என்ற படத்திற்காக விஷால் என்னிடமும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடமும் பணம் வாங்கி இருந்தார்.

அதற்கு உத்தரவாதமாக சில ஆவணங்களை அவர் கொடுத்திருந்தார். அந்த ஆவணங்களை நான் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம் கொடுத்து இருந்தேன்.

Also Read  பிக்பாஸ் ஷிவானி - பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

அவருடைய கொடுக்கல் வாங்கல்களை எல்லாம் இயக்குனர் சிவக்குமார் என்பவர் தான் கவனித்து வந்தார். அதனால் திருப்பூர் சுப்பிரமணியம் விஷாலின் ஆவணங்களை அவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென இயக்குனர் சிவக்குமார் இறந்து விட்டதால் அவர் அந்த ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

Also Read  நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ...

அப்போது விஷால் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். அதனால் நாங்கள் அவருக்கு என்ஓசி அளிக்கவும் முன்வந்தோம். இதனால் எந்தப் பிரச்சினையும் வராது.

இருப்பினும் விஷால் எங்களை நம்ப மறுக்கிறார். உண்மையில் அந்த ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாது. இந்த புகார் ஒரு சாதாரண விஷயம்தான். பெரிதுபடுத்த தேவையில்லை” என்று கூலாக கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து மீண்ட கங்கனாவின் வைரல் பதிவு!

Lekha Shree

டாட்டூ போடுவதற்கு வேறு இடமே இல்லையா? ரோஜா சீரியல் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

HariHara Suthan

அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமில்லை… 3வது ராஷ்மிகா மந்தனாவுடன் இணையும் டாப் ஹீரோ…!

HariHara Suthan

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

“டாக்டர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

Jaya Thilagan

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் பற்றி வெளியான நல்ல செய்தி… காடன் பட லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!

HariHara Suthan

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் திரிஷ்யம் 2! என்ன காரணம்னு தெரியுமா?

HariHara Suthan

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

Lekha Shree

பிக்பாஸ் புகழ் யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

Tamil Mint

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj