a

துவம்சம் செய்த படிக்கல் – விராட் கோலி ஜோடி : ராஜஸ்தான் அணி மீண்டும் தோல்வி


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே மும்பை வான்கடேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர், ஓரா ஆகியோர் களமிறங்கினர்.

பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழக்க ஓரா 7 ரன்களில் நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 18 பந்துகளில் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ராஜஸ்தான் அணியை சிவம் துபே ரியான் பராக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ரியான் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் விளாச சிவம் துபே தனது பங்கிற்கு 32 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த ராகுல் திவாட்டியா 23 பந்துகளில் அதிரடியாக விளையாடி 40 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணியின் துல்லியமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் சேர்த்தது.

Also Read  கோலிக்கு பந்துவீச மறுத்த ஆர்.சி.பி. வீரர்! - என்ன காரணம்?

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கேப்டன் விராட் கோலி – படிக்கல் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு அவ்வளவாக எடுபடாத நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு கட்டத்தில் எதிரணி வீரர்களை துவம்சம் செய்தனர்.

ஒரு முனையில் விராட் கோலி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் இளம் கன்று பயமறியாது என்பதை போன்று அபாரமான ஆட்டத்தை படிக்கல் வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர், 52 பந்துகளில் 6 சிக்சர்கள் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இந்திய அணியில் விளையாட ஒரு வீரர் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற பெருமையையும் தேவதத் படிக்கல் தட்டிச் சென்றார்.

Also Read  சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

உலகின் ஆபத்தான பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலி 47 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களை சேர்த்தார். இருவரின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூர் அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியை வசப்படுத்தியது. எதிரணியை கடுமையாக சோதித்த படிக்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் களமிறங்குகிறது.

Also Read  ஆர்.சி.பி உடையில் கலக்கிய உசைன் போல்ட்!

இதே போல் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து களம் காண்கிறது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல்-ஐ குறிவைக்கும் கொரோனா – சென்னை அணியில் 2 பேருக்கு தொற்று உறுதி..!

Lekha Shree

ஆர்.சி.பி உடையில் கலக்கிய உசைன் போல்ட்!

Jaya Thilagan

ஐபிஎல்: 10 நொடிக்கு ரூ.14 லட்சம்… கல்லா கட்ட காத்திருக்கும் நிறுவனங்கள்!

Jaya Thilagan

புது மாப்பிள்ளை பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! இது தான் காரணமா?

Devaraj

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு ஒரு நல்ல செய்தி!

Devaraj

10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல – மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

Jaya Thilagan

எம்.எஸ் தோனியின் புதிய சாதனை!

Devaraj

தோனிக்கு 12 லட்சம் அபராதம் – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

Jaya Thilagan

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி

Jaya Thilagan

ராஜஸ்தானில் இருந்து கழன்ற மற்றொரு வீரர் – நெருக்கடியில் சஞ்சு சாம்சன்!

Devaraj

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj