முன்களப்பணியாளர்களை கௌரவிக்கும் ஆர்சிபி அணி…! புளு ஜெர்ஸியில் விளையாட உள்ள வீரர்கள்..!


பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் முன்களப்பணியாளர்களின் விலைமதிப்பற்ற சேவையை பாராட்டும் வகையில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புளு நிற ஜெர்ஸி அணிந்து விளையாட உள்ளனர்.

கடந்த மே மாதம் 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்தது பிசிசிஐ.

Also Read  இங்கிலாந்து அணியை திணறடித்த இந்தியா: 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

அதன்பின்னர், மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

இதற்காக ஒவ்வொரு அணியின் வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் முன்களப்பணியாளர்களின் விலைமதிப்பற்ற சேவையை பாராட்டும் வகையில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புளு நிற ஜெர்ஸி அணிந்து விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.

இதுதொடர்பாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா பேரிடர் காலத்தில் விலைமதிப்பற்ற சேவையாற்றி வரும் முன்களப்பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக PPE கிட் நிறமான புளு நிற ஜெர்ஸியில் பெங்களூரு அணி வீரர்கள் விளையாட உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபில் போட்டி: “எங்களையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்” பஞ்சாப் முதல்வரின் கோரிக்கை!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…!

Lekha Shree

சன் ரைசர்ஸ் அணியை மிரட்டிய டிஆர்எஸ் எம்.எல்.ஏ..! காரணம் இதுதான்!

Jaya Thilagan

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு… பிரிட்டன் பிரதமர் கண்டனம்..!

Lekha Shree

இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் லோவ்லினா போர்கோஹைன்-க்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு..!

Lekha Shree

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? சூடு பிடிக்கும் விவகாரம்..!

Lekha Shree

ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

sathya suganthi

டோக்கியோ பாராலிம்பிக் – இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!

Lekha Shree

மும்பை – டெல்லி இன்று மோதல்!

Jaya Thilagan

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் வெல்லுமா இந்தியா?

Lekha Shree