ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! மிரண்டு போன பிசிசிஐ!


14வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் ரசிகர்கள் இல்லாமலும் நடைபெற்றுக்கொண்டுள்ளது ஐபிஎல் போட்டிகள்.

இதுவரை நடந்துமுடிந்துள்ள ஆட்டங்களின் வெற்றி தோல்வி அடிப்படையில் புள்ளி பட்டியலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

சென்னை அணி இரண்டாவது இடத்திலும் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.

இன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதவிருந்தன. ஆனால், அந்த ஆட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா 2ம் அலையின் எதிரொலி - முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், இன்று நடைபெற இருந்த பெங்களூரு-கொல்கத்தா இடையிலான போட்டியை தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read  கடைசி வரை போராடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - வெற்றியை தட்டிப்பறித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

எக்காரணத்தை கொண்டும் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படாது என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறிவந்த நிலையில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மிரண்டு போன கிரிக்கெட் நிர்வாகம் போட்டியை ஒத்திவைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றி நடை போடுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Lekha Shree

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!

Lekha Shree

கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Devaraj

“நான் வந்துட்டேன்னு சொல்லு” மீண்டும் இணைகிறாரா ஆர்.ஜே. பாலாஜி?

Jaya Thilagan

உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

கொரோனா பரவலில் ஐபிஎல் முக்கியமா – கில்கிறிஸ்ட் கேள்வி!

Devaraj

ட்ரெண்டாகும் தல தோனியின் அசத்தலான ஹேர் ஸ்டைல்.

mani maran

சிஎஸ்கே வின் மெர்சல் ஆட்டம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Jaya Thilagan

ஐபிஎல் அணிகளும்…! இணைய ரசிகர்களும்…!

Devaraj

“குட்டி கில்லாடி கலரு கண்ணாடி” இணையத்தில் வைரலாகும் சுட்டிகுழந்தை சாம் கரணின் புகைப்படம்!

Jaya Thilagan

அதென்ன 54 – கொல்கத்தா அணி கிளப்பிய சர்ச்சை!

Jaya Thilagan