a

வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92 ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு!


வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92 ஏப்ரல் 17ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 92ல் இருந்து இரு சக்கர வாகனத்தில் 3 வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து மர்ம நபர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

Also Read  "மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் அது வாக்கு இயந்திரம் அல்ல எனவும் கோளாறான விவிபாட் இயந்திரங்கள் எனவும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கம் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஊழியருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Also Read  சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

கூட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் விவிபாட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வேளச்சேரி தொகுதி 92 வாக்குச்சாவடிக்கு வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Also Read  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுகவினர்…! வைரலாகும் போஸ்டர் இதோ…!

Tamil Mint

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரின் “உதயசூரியன்” கடிகாரம்…!

Lekha Shree

தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி…!

Devaraj

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் – 124 முதல் 154 தொகுதிகளில் அதிமுக பெற்றி பெறும் – ஹரித்வார் சுவாமி ஆரூடம்

Devaraj

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

“பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு வரி வசூலில் தீவிரம் காட்டுகிறது” – ராகுல் காந்தி

Tamil Mint

“எனக்கே விபூதி அடிக்க பாக்குறல” மொமெண்ட்… இணையத்தில் வைரலாகும் எச்.ராஜாவின் புகைப்படம்!

Lekha Shree

வாத்தி கம்மிங்…! அப்பாவு : ஆங்கில ஆசிரியர் டூ அவைத்தலைவரான கதை…!

sathya suganthi