a

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!


காதல் கோட்டை படத்தில் வரும் அஜித்-தேவயானி ஜோடி போலவே நிஜ வாழ்விலும் ஒரு ஜோடி உள்ளனர். அவர்களின் காதல் கதையை கேட்பதற்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் என்னும் கிராமத்தில் நடந்த கதை இது. கடந்த 1970ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பெண் மெரினா அங்கே 5 நாட்கள் தங்கியுள்ளார். அப்பொழுது டூரிஸ்ட் கைடாக இருந்தவர் தான் நம் கதையின் நாயகன்.

அவர் அப்போது மெரினாவுக்கு ஒட்டக சவாரி செய்ய கற்று கொடுத்துள்ளார். அங்கே இருந்த 5 நாட்களில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. மெரினா மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பொது, “டூரிஸ்ட் ஐ லவ் யூ” என கூறியுள்ளார்.

அதன் பின்னர் காதல் கடிதங்கள் மூலம் இருவரின் காதலும் வளர்ந்துள்ளது. அப்பொழுது மெரினா திடீரென ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள் என கூற, நம் நாயகனும் நண்பர்களிடம் 30,000 ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு தெரியாமல் சென்றுவிட்டார்.

Also Read  ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி - சிந்து முன்னேற்றம்; சாய்னா விலகல்!

அங்கே மெரினாவுடன் 3 மாதங்கள் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர், மெரினா திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவிலேயே தங்கி விடலாம் என்று கூற குடும்பத்தை பிரிய மனமில்லாமல் ராஜஸ்தானுக்கே திரும்பியுள்ளார் டூரிஸ்ட் கைடு.

சில மாதங்கள் கழித்து வீட்டில் பார்த்த பெண்ணை மணந்துகொண்டு வாழ்ந்துள்ளார். இப்பொழுது அவருக்கு வயது 82. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்டார்.

Also Read  மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! - ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

ஜெய்சால்மரில் நீடித்த வறட்சி, சாபம் இருப்பதாக மக்கள் வைத்திருந்த மூடநம்பிக்கை, பேய் இருப்பதாக கூறப்பட்ட கட்டுக்கதை ஆகிய காரணங்களால் மக்கள் எல்லோரும் அக்கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால், நம் நாயகன் மட்டும் வெளியேறாமல் அங்கேயே பாதுகாவலராக இருக்கிறார்.

அண்மையில் மெரினா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் விரைவில் இந்தியா வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

தனிமையில் வாடும் டூரிஸ்ட் கைடுக்கு இந்த கடிதம் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. தன் காதலியின் வரவை நோக்கி வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார் ஜெய்சால்மரின் பாதுகாவலர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

இதில் கூடவா தமிழகம் முதலிடம்…! பெருமைக்கொள்ளும் விசயம் அல்ல…!

Devaraj

மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

Ramya Tamil

தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி…!

Devaraj

டெல்லி மயானங்களில் இடமில்லை: பூங்காக்களில் தகனமேடைகள் அமைக்கப்படும் அவலநிலை…!

Devaraj

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அபாயம்!

Tamil Mint

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை தாக்கும் இருதய நோய்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…

VIGNESH PERUMAL

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு

Devaraj

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint