a

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?


கொரோனா தொற்று காரணமாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 வயதான பெண் சிங்கம் உயிரிழந்தது. மேலும் 8 சிங்கங்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் 160 இனங்களை சேர்ந்த 1500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் காரணமாக பூங்கா மூடப்பட்டிருப்பதால் விலங்குகளையும் பறவைகளையும் ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி தொற்றால் நீலா என்கிற ஒன்பது வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து 11 சிங்கங்களுக்கு நடந்த பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Also Read  இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

இதில் இரண்டு சிங்கங்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உயிரியல் பூங்கா நிர்வாகம் சிங்கங்களை பராமரித்து வந்த நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவியுள்ளது. ஊழியர்கள் மூலமாக சிங்கங்களுக்கு தொற்று பரவி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகளும் மருத்துவர்களும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

Also Read  பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர் மீது குவியும் பாலியல் புகார்கள்... நடந்தது என்ன?

முன்னதாக ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்குள்ள 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவை இயல்பாக நடமாடி, உணவு உண்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சற்று நேரம் செயற்கை ஆக்சிஜன் கொடுக்கலாம் என்றும் மனிதர்களை போல முழுமையாக வென்டிலேட்டரில் வைப்பது சற்று கடினமான விஷயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  அரசு அதிகாரிக்கு இவ்வளவு சொத்தா? அம்பலமான அதிர்ச்சித் தகவல்...

தற்போதுள்ள நிலையில் பூங்கா நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் பூங்காவில் உள்ள சிம்பன்சிகள் மற்றும் குரங்குகளுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிங்கங்களுக்கு பூங்கா ஊழியர்கள் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என தற்போது நம்பப்படுகிறது. இன்னொரு கூற்றாக சிங்கங்களுக்கு வழங்கப்பட்ட இறைச்சியின் மூலமும் தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்…! அதன் பின்னர் கொடுத்த அட்வைஸ்…! நடந்தது என்ன…?

Devaraj

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள் – பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

Lekha Shree

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj

விளையாட்டு வீரர்களுக்கு தடையை நீக்கிய தமிழக அரசு

Tamil Mint

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

தடுப்பூசி வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

தமிழக முதல்வர் டெல்லி சென்றதற்கும் சசிகலாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதற்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

திமுகவின் ஐபேக் டீமுக்கு போட்டியாக அதிமுகவில் களமிறங்கிய SMS டீம்!

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 28.05.2021

sathya suganthi