a

பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – அதிரவைக்கும் தகவல்கள்


கனடாவில் பழங்குடியினர் உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 வயதிற்கு குறைவான குழந்தைகளின் உடல்களும் அடங்கும்.

நாடு முழுவதும் உள்ள பல பழங்குடியின சமூகத்தில் இருந்து குழந்தைகள் இது போன்ற பள்ளிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துவரப்பட்டு ஆதிக்க எண்ணம் கொண்டவர்களால் இன படுகொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிந்த சடலங்கள் பழங்குடியின குழந்தைகளுடையது தான் என பழங்குடியினர் தலைவர் ரொசன்னா கசிமிர் உறுதிபடுத்தியுள்ளார்.

தரைக்கு அடியில் இருக்கும் பொருட்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் இந்த உடல்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இன்னும் மைதானத்தில் தேடல் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் சிங்கப்பூர் வகை கொரோனா வைரஸ்…?

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க குழுவின் 2015-ம் ஆண்டு அறிக்கை படி, கனடாவின் பழங்குடியினர் அனைவரையும் மத மாற்றும் பணியை அரசு செய்த போது நாடு முழுவதும் 1,50,000 சிறுவர்கள் இது போன்ற குடியிருப்பு பள்ளிகளுக்கு அழைத்துவரப்பட்டனர் என்று கசிமிர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுள் 6,000-க்கும் மேற்பட்டோர் கலாசார இன படுகொலை செய்யப்பட்டனர் என்றும் இறந்த குழந்தைகளின் மரணத்துக்கு எந்த காரணங்களும் ஆவணங்களும் இல்லை என்றும் முழுமையான பதிவுகள் எதுவும் இல்லாததனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையை கூற இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  நியூ யார்க்கில் ஹாரி பாட்டர் கடை; ஆச்சரியத்தில் மக்கள்!

1890 முதல் 1978 வரை செயல்பட்ட இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்க கூடும் என சொல்லப்படும் நிலையில், 1990-களில் தான் கனடாவில் இது போன்ற பள்ளிகள் மூடப்பட்டதாக கசிமிர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கனடா வரலாற்றின் மிக இருண்ட பக்கங்கள் திறக்கப்படுள்ளது என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனம் உடைந்து தெரிவித்துள்ளார்.

Also Read  வயதோ 70…! ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்…! சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…!

பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என்றும் இது போன்ற சடலங்கள் கிடைக்கும் நிகழ்வு புதிது அல்ல என்றாலும், வரலாற்றில் கசிந்திருக்கும் ரத்தத்தினை நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது என்றும் கனட சட்டமன்ற தலைவர் பெர்ரி பெல்லக்ராட் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி நன்மையளிக்கும் – ஆய்வில் தகவல்…!

Devaraj

டொனால்ட் ட்ரம்பின் முந்தைய கொள்கைகளுக்கு செக் வைத்த புதிய ஜனாதிபதி பைடன்

Tamil Mint

உரம் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு கோர விபத்து – அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

sathya suganthi

நாளை நிகழவிருக்கும் வானியல் அதிசயம் – Super Blood Moon-ஐ இந்தியாவில் காணமுடியுமா?

Lekha Shree

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

பல கோடி ஆண்டு பழமையான விலங்கு கொம்பின் புதைபடிமத்தை கண்டுபிடித்த இந்திய சிறுவன்…!

Devaraj

ரொனால்டோ பாணியை பின்பற்றிய பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா…!

Lekha Shree

குப்பையோடு போக இருந்த ரூ.7.5 கோடி லாட்டரி பணம் – கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தியர்!

sathya suganthi

ஜப்பானுக்கு அருகில் உள்ள தீவில் ஏவுகணை தடுப்பை நிறுவியது ரஷ்யா

Tamil Mint

ஸ்காட்லாந்தில் உலாவும் பேய்க்கப்பல்! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

Lekha Shree

பாராளுமன்றத்தில் “செக்ஸ் ஊழல்” – சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த அதிகாரிகள்…!

Devaraj

ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? – மலாலா

Shanmugapriya