a

ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் – விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரெம்ட்சிவீர் தடுப்பூசியின் ஒரு டோஸை கள்ளச்சந்தையில் ரூ.70 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படுவதாக புனே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

Also Read  வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கார்வே சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அருகே கொரோனா தடுப்பூசியை சட்டவிரோதமாக விற்பனை செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், தனது தந்தை சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அப்போது தான் கொரோனா தடுப்பூசிக்கு உள்ள கிராக்கி தெரியவந்ததாகவும் கைதான 2 பேரில் ஒருவரான 22 வயது இளைஞன் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐ எட்டும்! வெளியான அதிர்ச்சி தகவல்!

இதையடுத்து நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் பல்வேறு காரணங்களை கூறி ரெம்ட்சிவீர் தடுப்பூசியை வாங்கி ரூ.70 ஆயிரம் ரூபாய் என அதிக விலைக்கு இளைஞர்கள் விற்ற நிலையில், அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது தந்தைக்கு மருத்துவ செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் நகரின் பல இடங்களில் கள்ளச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விற்ற 8 குழுக்களைச் சேர்ந்த 16 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 15 ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

Tamil Mint

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

Tamil Mint

விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

Tamil Mint