சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி


சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வழக்கறிஞர் ஆனந்த்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் கல்வி மற்றும்வேலைவாய்ப்பிலும், அரசின் சலுகைகளைப் பெறவும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. 

இந்த இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

Also Read  ஜெயலலிதா வீடு: தீபக் கிளப்பும் புது பூதம்

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இதுபோன்ற சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 

சமீபகாலமாக பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும்போது சாதி வாரியாக ஏன் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். 

Also Read  தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

மேலும், ‘‘போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாது. ஏற்கெனவே சாதிவாரியாக புள்ளி விவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கமுடியாது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Also Read  அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை சசிகலா தான் தேர்வு செய்வார் - டிடிவி தினகரன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

சொந்த மருத்துவ உபகரணங்கள் கொண்டு சிறுமியின் துண்டான விரலை ஒட்டவைத்த மருத்துவர்!

Tamil Mint

மநீம 4-ம் ஆண்டு விழா; பிரம்மாண்ட மாநாடுடன் களமிறங்கும் கமல்!

Tamil Mint

மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

sathya suganthi

மின்வாரியத்துறை தனியார் மயமாக்கப்படும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி

Tamil Mint

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் கைது…!

Lekha Shree

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

sathya suganthi

அதிரவைக்கும் லலிதா ஜூவல்லரி ஐ.டி.ரெய்டு… சேதாரம் என சொல்லி ரூ.1000 கோடியை ஆட்டையைப் போட்டது அம்பலம்…!

malar

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

“தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு இல்லை” – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Lekha Shree

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் – தமிழக அரசு

Lekha Shree

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj