முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் : திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்..!


நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று நவம்பர் 21 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

Also Read  நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்

அதன்படி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. தற்போது, திமுகவில் நாடாளுமன்ற மக்களவையில் 38 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களும் உள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Also Read  அரசு பஸ்களில் மீண்டும் திருவள்ளுவர் படம் - மு.க.ஸ்டாலின் உத்தரவு

இதற்கிடையே இன்று நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் திமுகவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தங்களது ஊழல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள்.

Tamil Mint

இ-பதிவில் புதிய வசதி – தன்னார்வலர்களுக்கு கொண்டாட்டம்!

Lekha Shree

காந்தியைப் போல் நேதாஜி படமும் ரூபாய் நோட்டில் வருமா?

Tamil Mint

கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை….

Devaraj

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு?

Lekha Shree

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் கையெழுத்து – 5 முக்கிய அறிவிப்புகள்…முழு விவரம்

sathya suganthi

கொரோனா நிவாரணம்: 13 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு! முழு விவரம் இதோ!

sathya suganthi

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல்: விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Shanmugapriya