மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்


Tamilmint  Team | 2.9/5 – Rating 

படக்குழு : நயன்தாரா, ஊர்வசி, மோலி, ஆர்.ஜெ பாலாஜி மற்றும் அஜய் கோஷ்

இயக்குனர் :  ஆர்.ஜெ.பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன்

கதைக்களம் : மூக்குத்தி அம்மன் பூமியில் இறங்கி, ஒரு தொலைக்காட்சி நிருபரான ஏங்கல்ஸ் ராமசாமியை போலி கடவுள்களை அம்பலப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார். 

ஒரு நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சாதாரண குடும்பத்தில் நடிகர் பாலாஜி வாழ்ந்து வருகின்றார். ஒரு சிறிய கிராமத்தில் செய்தி நிருபராக நிலங்களை கையகப்படுத்தும் பிரச்சினையைப் பற்றி செய்தி செய்திருக்கின்றார். இதன் மூலம் படத்தின் காட்சி தொடங்குகிறது.

எல்லா நடுத்தர குடும்பத்திலும் உள்ளது போல் மூன்று தங்கைகளும், நகைச்சுவை மற்றும் அதிக பாசம் கொண்ட அம்மாவையும்(ஊர்வசி) கொண்டு கதைக்களம் நகர்கின்றது. இதில் நடிகை ஊர்வசி பல இடங்களில் நமது மனதை கவரும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குடும்பமாக தங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு செல்லும் காட்சி ஒன்றில் நடிகர் பாலாஜி கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது எப்பொழுதுமே நாம் பார்க்காத ஒரு ஆர் ஜே பாலாஜி அந்த காட்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read  'பிச்சைக்காரன் 2' - வெளியானது 'மாஸ்' டைட்டில் லுக்… படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

நிலத்தைக் கைப்பற்றிய சாமியாரிடம் இருந்து தனது தந்தையும் காப்பாற்ற வேண்டும் என்று குடும்பமாக இவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் ரசிக்கத்தக்க வகையில் அமையவில்லை என்றே கூற முடியும். ஏனென்றால் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் கொண்டுள்ள ஒரு சாமியாரை கவிழ்க்க வேண்டும் என்றால் அதற்கான உத்திகள் பெரிய அளவில் அமைந்திருக்கவேண்டும். ஆனால் இவர்கள் செய்யக் கூடிய சிறிய சிறிய யுத்திகள் எந்த அளவிற்கு ஏற்புடையதாக உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் டிரைலரில் காண்பிக்கப்பட்ட நிறைய காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டுள்ளன. 

Also Read  ஐந்து மாதங்களுக்குப் பின் சென்னையில் கோயில்கள், தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன

சூலத்தை கொண்டு அதிக அளவில் நடந்து கொண்டே இருக்கக்கூடிய காட்சிகள் மட்டும்தான் நயன்தாராவிற்கு அமைந்துள்ளதே தவிர இதில் அவர் மிகப் பெரிய அளவில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதில் முக்கியமாக ஒரு காட்சியில் நடிகர் ஆர் ஜே பாலாஜி தனது தங்கையை ஒரு கிறிஸ்தவ பள்ளியில் சேர்த்து விட்டிருப்பார். அதன் மூலம் தன் தங்கைக்கு ஏற்படக்கூடிய மதரீதியான சிறுசிறு மாற்றங்களை ஒரு காட்சியில் கவலையுடன் அதைக் காண்பித்து இருப்பார். ஆனால் மதமாற்றத்தில் உள்ள அரசியல் பற்றி அவரிடம் புரிதல் இல்லாத ஒரு விஷயத்தை இது காண்பித்துள்ளது.  இந்த இடத்தில் அது தெளிவாக மக்களிடம் சென்று சேரவில்லை என்று தான் கூறவேண்டும்.

Also Read  திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

கடைசியாக கூற வேண்டுமென்றால் நடிகர் ஆர்.ஜெ. பாலாஜிக்கு தனிப்பட்ட முறையில் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தன் படத்தில் ஒரு விழிப்புணர்வாக அரசியல் கலந்து அதை கூறியுள்ளார். ஆனால் அது இன்னமும் களநிலவரங்களை தெரிந்துகொண்டு தெளிவான முறையில் கூறியிருந்தார் மேலும் சிறப்பு மிக்கதாக படம்  அமைந்திருக்கும். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூர்ணாவிடம் திருமண மோசடி: நான்கு நபர்கள் கைது

Tamil Mint

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree

முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது

Tamil Mint

ஒரே மாதத்தில் 10 காட்டெருமைகள் உயிரிழப்பு: கொடைக்கானலில் அதிர்ச்சி.

mani maran

சரண்யா-பொன்வண்ணன் மகள் திருமணம்! முதலமைச்சர் நேரில் வாழ்த்து! வைரல் புகைப்படம்!

sathya suganthi

‘லேடி சூப்பர் ஸ்டார்’ – நயன்தாரா பங்கேற்கும் நிகழ்ச்சியின் தாறுமாறு ப்ரோமோ..! ரசிகர்கள் உற்சாகம்..!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

வருமான வரிக்கு வட்டி… விலக்கு கேட்டு நடிகர் சூர்யா மனு… தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

ரேஷன் கடையில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ பதிவு

sathya suganthi

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!

sathya suganthi

சேகர் பாபு மகளின் காதலன் வெளியிட்ட வீடியோ! காதலுக்கு எதிர்ப்பு? காதலன் மேல் பல வழக்குகள்?

Lekha Shree

கார்த்தியின் கைதி 2 மற்றும் ரீமேக்கிற்கு தடை

sathya suganthi