சென்னை: பறக்கும் ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் கொள்ளை! திருவான்மியூரில் பரபரப்பு..!


சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் 1.32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் டீக்காராம் மீனா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு அவர் பணியில் இருந்த போது பயணிகள் யாருமற்ற நேரத்தில் அடையாளம் தெரியாத மூன்று பேர் கவுண்டருக்கு வந்து அவரைக் கட்டிப் போட்டுவிட்டு ஒரு லட்சத்து 1,32,500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுனர்.

இன்று காலை டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது நீண்ட நேரமாக டிக்கெட் கவுண்டர் திறக்கப்படாததால் பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Also Read  தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

அதன்பிறகு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த தாகக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது காய், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்டிருந்த நிலையில் டீக்காராம் மீனா இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர்.

பின்னர், உடனே அவரை விடுவித்த அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது துப்பாக்கி முனையில் தன்னை கட்டிப் போட்டுவிட்டு 3 மர்ம நபர்கள் 1,32,500 ரூபாய் கொள்ளை அடித்து சென்றதாக தெரிவித்தார்.

Also Read  பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

இதனடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்கள்… முதலிடத்தில் தமிழகம்..!

Lekha Shree

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

தமிழகத்தில் இனி வாரத்திற்கு 2 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

suma lekha

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

‘நம்மை காக்கும் 48’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

பழங்குடியின மாணவியின் படிப்பிற்கு உதவிய திமுக எம்.பி கனிமொழி..!

Lekha Shree

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

Tamil Mint

தினமும் மணியடித்து பூஜை செய்யும் குரங்கு…! ஆஞ்சநேயர் கோயிலில் நிகழும் அதிசயம்…!

Devaraj

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ச்சல்!

suma lekha