கேப்டன்சியிலிருந்து விலகும் விராட் கோலி? அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாவா?


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராத் கோலி விலகுவதாகவும் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

தற்போது மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் விராட் வெற்றிகளை குவித்து ஆல் டைம் கிரேட் கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகுஇந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு காரணம் ரோகித் சர்மாவின் ஐபிஎல் வெற்றிகளும் இந்திய டி20 அணிக்காக கோலி இல்லாதபோது ரோகித் சர்மா பிரமாதமாக செயல்பட்டு பெற்றுத்தந்த வெற்றிகளும் தான். இதற்கு உதாரணம் இலங்கையில் நடைபெற்றதாக நிதாகஸ் டிராபி.

Also Read  தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

சமீப காலமாக விராட் கோலி சரிவர விளையாடுவதில்லை. பேட்டிங்கில் அதிரடி செலுத்தி வந்த கோலி தற்போது அவ்வளவாக சோபிக்கவில்லை என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்றது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. அதையடுத்து அனைத்து தேர்வு விவகாரங்களில் கோலிக்கு ஏகப்பட்ட தடுமாற்றங்கள் உள்ளது என்றும் கண்டபடி ஆட்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்டுகின்றன.

Also Read  ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் - சொல்வது யார் தெரியுமா?

இந்நிலையில், இதுகுறித்து முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள்காட்டி, “விராட் கோலி தன்னுடைய பழைய பார்மை மீட்க இந்த முடிவு எடுத்துள்ளார். இந்த அறிவிப்பை அவரே கூடிய விரைவில் வெளியிடுவார்.

பேட்டிங்கில் கவனம் செலுத்த தற்போது கோலி விரும்புகிறார். தன் பழைய நிலையை எட்ட கேப்டன்சி சுமை இடையூறாக இருப்பதாக அவர் கருதுகிறார்” என கூறப்பட்டிருந்தது.

Also Read  3வது இடத்தில் இந்தியா ..

இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 65 வெற்றிகளையும் 45 டி20 போட்டிகளில் 27 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இது அசாத்தியமான ஒரு சாதனைதான்.

அதேபோல் ரோகித் சர்மா 10 முறை ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 8 முறையும் டி20 போட்டிகளில் 19 முறை கேப்டனாக இருந்து 15 முறையும் வென்றுள்ளார்.

இதை ஒப்பிட்டு பார்க்கும்போது வின்னிங் சதவீதம் அதிகமாக உள்ளது. விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகி ரோஹித் சர்மா நியமிக்கப்படுவது இது வரை தகவலாக தான் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

உண்மையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆனால், இந்த செய்திகள் விராட் கோலியின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

இந்தியாவில் பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் ராகுல் டிராவிட்…!

Lekha Shree

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

“இந்த மாதம் எங்களுக்கு 2 கோடி தடுப்பூசி கொடுங்க” : மத்திய அரசிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

mani maran

4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை… பெண் விவசாயி தொடர்ந்த வழக்கில் வெற்றி..!

Lekha Shree

கொரோனா பாதிப்பில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது..? மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

50 வருடமாக ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ..! அரசியல் அசுரவாதி உம்மன் சாண்டி ஓர் பார்வை…

HariHara Suthan

இந்திய அளவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேசம்! எதில் தெரியுமா?

Devaraj

ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! இன்றைய விலை நிலவரம் இதோ!

Tamil Mint

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi