“நீங்கள் அழுதது மகிழ்ச்சி… பை பை பாபு..!” – சந்திரபாபு நாயுடுவை விளாசிய நடிகை ரோஜா..!


நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, “சந்திரபாபு நாயுடு இனி சட்டசபைக்கு வரவே முடியாது. கடவுள் உங்களை அனுமதிக்கவே மாட்டார்” என கூறியுள்ளார்.

ஆந்திராவின் முதலமைச்சராக மூன்று முறை பத்தாஹ்வி வகித்தவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. தற்போது ஆந்திராவில் ஆளும் கட்சியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவையும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை தனிப்பட்ட ரீதியாக ஆளும் கட்சி தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, “சட்டசபைக்கு இனி நான் திரும்பினால் அது முதல்வராக மட்டுமே இருக்கும்” என சூளுரைத்து வெளிநடப்பு செய்தார்.

Also Read  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணையும் விஜய்சேதுபதி-தமன்னா…! வெளியான ப்ரமோ சூட் போட்டோ…!

சட்டசபையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து சந்திரபாபு நாயுடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் வருத்தத்தில் கண்கலங்கி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதற்கு பதிலாக ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரோஜா.

அதில், “72 வயதில் என்டிஆரின் அதிகாரத்தைப் பறித்து அவரை அவமானப்படுத்தியது ஞாபகமிருக்கிறதா?

Also Read  "கணக்கில் வராத பணம் என்று எதுவும் இல்லை!" - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதனால்தான் 71 வயதில் சந்திரபாபு நாயுடு கண்ணீர் வடிக்கிறார். நாம் ஒருவருக்கு என்ன செய்தோமோ அதுவே நமக்கு திரும்ப நடக்கும். இதே சட்டசபையில் என்னை இதைவிட மோசமாக நீங்கள் நடத்தினீர்கள்.

இதே சட்டசபையில் நீங்கள் அதிகாரத்தில் இருந்தபோது ரோஜா ப்ளூ ஃபிலிமில் நடித்துள்ளார் என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மீடியாவிடம் சிடி போட்டு காட்டியதை மறந்து விட்டீர்களா?

Also Read  'முதலமைச்சர்' மு.க.ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்!

அப்போது அது உங்களுக்கு அநாகரீகமாக தெரியவில்லையா? உங்களுக்கு ஒரு நியாயம்… எங்களுக்கு ஒரு நியாயமா? உங்கள் வீட்டில் மட்டும்தான் பெண்கள் இருக்கிறார்களா?

எனக்கு குடும்பம் இல்லையா? எனக்கு குழந்தைகள் இல்லையா? யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லலாமா? நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை யாரும் மறந்து போகவில்லை.

அதிகாரத்தில் இருந்தபோது என்ன என்ன பேசினீர்கள். சமூகவலைதளத்தில் என்ன என்ன கருத்துக்களை வெளியிட்டீர்கள். உங்களின் இந்த நிலை எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

எனக்கு என்ன என்ன கொடுமை செய்தீர்கள். சஸ்பெண்ட் நடவடிக்கை எல்லாம் எடுத்தீர்கள். உங்கள் பேச்சுகளால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். இப்போதுதான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் இனி சட்ட சபைக்கு வரவே முடியாது. கடவுள் உங்களை அனுமதிக்கவே மாட்டார். பை பை பாபு” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றிமாறன்-சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியீடு…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ…!

Devaraj

“பசு சிறுநீரால் தயாரிக்கப்பட்ட பினாயிலால் மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும்” – ம.பி அரசு

Tamil Mint

கிரிக்கெட் போட்டிகளில் ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!

Tamil Mint

பொங்கல் ரிலீஸ்: OTT யில் வெளியாகும் ’மகான்’..!

suma lekha

“மாணவர் தனுஷின் இறப்பிற்கு திமுக தான் முழு பொறுப்பு!” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Lekha Shree

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

பெற்ற தாயின் உயிரை காக்க உதவிய 2 வயது பெண் குழந்தை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சர்வைவர் – Wild Card Entry-ல் நுழையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

Lekha Shree