a

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையிலான மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 மாத காலத்திற்கான நிவாரண தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  வாட்ஸ் ஆப் வழி எப்படி மின் கட்டணம் அறிவது? முழு விவரம் இதோ…!

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி நடப்பாண்டிற்கு 1.72 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி (பகுதி) ஆகியவற்றைச் சேர்ந்த 1,46,598 பயனாளிகளும், மேற்கு கடற்கரைப் பகுதி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 1,72,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read  மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ…!

Devaraj

ஊடரங்கை விதிமுறைகளை கடுமையாக்கும் தமிழக அரசு…! புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Devaraj

திமுக வெற்றிக்கு உழைக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின்!

Devaraj

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

Lekha Shree

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint

தமிழகத்தின் பணக்கார முதலமைச்சர் வேட்பாளரா கமல்?

Devaraj

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

Tamil Mint

கோவையில் மற்றுமொரு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி…!

Devaraj