எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த சோகம்!!! ஓடும் காரில் பாலியல் பலாத்காரம்….


சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு  சமூக வலைதளம் மூலம் அறிமுகமானார், ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த தஜ்வீர். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். தஜ்வீர், ரொம்ப நல்லவர் என்று நம்பினார் அந்த இளம் பெண்.

Also Read  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில், அவருக்கு சப் – இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஆக்ராவில் நடந்தது. இதற்காக அவர் செல்ல இருப்பதாகக் கூறினார். ’உங்கள் ஊரில் இருந்து பேருந்தில் வரவேண்டாம், நான் கார் கொண்டு வருகிறேன். சேர்ந்து போகலாம்’ என்று கூறியிருக்கிறார் தஜ்வீர்.

சொன்னபடி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு காரில் வந்தார் அவர். காரை டிரைவர் ஓட்டி வந்தார். ஆக்ராவில் தேர்வு எழுதிவிட்டு திரும்பும்போது, ஜாலியாக பேசிக்கொண்டு வந்த தஜ்வீர், பிறகு போதைப் பொருளை பயன்படுத்தத் தொடங்கினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓடும் காரிலேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்தப் பெண் கதறியும் விடவில்லை அவர்.

Also Read  பிறந்தநாள் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு... அதிர்ச்சி ஏற்ப்படுத்தியது நண்பர்கள்...

பின்னர் காரை, டெல்லி – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கோசிகாலா என்ற பகுதியில் நிறுத்தி, அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர். அங்கிருந்து வீட்டுக்கு வந்த இளம் பெண், நிலைமையை சொல்லி அழுதிருக்கிறார். பிறகு அவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலிசார், தஜ்வீரை கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு.!

mani maran

யூடியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

Lekha Shree

பள்ளி மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் வெளியிட்ட இளைஞர்… திடுகிட்ட மாணவிகள்…..

VIGNESH PERUMAL

ரூ.33 லட்சம் 213 சவரன் நகையுடன் சிறுவன் மாயம்!!! பெற்றோர் திட்டியதால் நேபாளம் தப்ப முயற்சி…..

Lekha Shree

வீட்டு பணிப்பெண் வீட்டு உரிமையாளரிடம் கைவரிசை….

VIGNESH PERUMAL

புதுக்கோட்டை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!

Lekha Shree

யூடியூபர் மதன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

மதுரை: குடிபோதையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…!

Lekha Shree

பம்பு செட்டில் பதுக்கிவைத்திருந்த 800 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

VIGNESH PERUMAL

மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்!!! மைத்துனரை ஷாக் வைத்து கொன்ற மாமன்…..

Lekha Shree

குடிமகன்கள் அலப்பறை – போதையில் போலீஸ் ஜீப் அடித்து உடைப்பு!

Lekha Shree

தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!

sathya suganthi