“மகிழ்ச்சி!” – மன்னிப்பு கேட்ட சித்தார்த்துக்கு பதிலளித்த சாய்னா நேவால்…!


சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இயங்கி வரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகர் சித்தார்த்.

தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி அரசியல் ரீதியான கருத்துக்களையும் துணிச்சலாக வெளியிட்டு வருபவர். ஆனால், இதனால் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

அந்த வகையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் நடிகர் சித்தார்த். கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அங்கு சென்றபோது, வழியில் விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது.

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலை வன்மையான வார்த்தைகளால் நான் கண்டிக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

Also Read  மச்சானுக்கு மகிழ்ச்சியான செய்தி: நமிதாவுக்கு பாஜகவில் புது பதவி

சாய்னாவின் இந்த பதிவை டேக் செய்த சித்தார்த், சர்ச்சைக்குரிய வகையில் பொருள் கொள்ளும்படி பதில் பதிவிட்டிருந்ததாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழத்தொடங்கின.

நடிகர் சித்தார்த்தின் கருத்து பெண்களை மிகவும் இழிவுப்படுத்துவதாக இருப்பதாக எழுந்த எதிர்ப்புகளை அடுத்து பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் சர்மா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் நடிகர் சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான். தவறான நோக்கத்தில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல் துறைக்கு கடிதம் எழுதியது.

Also Read  அதானி குழுமத்துடன் இணையும் ஃபிளிப்கார்ட்...!

மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்” என கூறியது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த், “ஒரு பெண்ணாக உங்களை தாக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. எனது மன்னிப்பு கடிதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்களுடைய கருத்துக்களும் என்னுடைய கருத்துக்களும் ஒத்துப்போகாமல் இருக்கலாம். எனது சாம்பியனாக நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்” என கூறினார்.

Also Read  2 கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் - அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

இதற்கு சாய்னா நேவால், சித்தார்த் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. முதலில் என்னை பற்றி ஏதோ சொன்னார். பிறகு மன்னிப்பு கேட்டார். சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை

ட்விட்டரில் நான் ஏன் வைரலானேன் என்றும் தெரியவில்லை. அதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். சித்தார்த்தின் இந்த விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக்கூடாது. பெண்களை இது போன்று வசைபாடக்கூடாது. ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காற்று வாங்க வெளியே வந்த பொது மக்களை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி

sathya suganthi

அரசியலுக்கு ஆயத்தமா? – நடிகர் விஜய் ஆலோசனை.

Tamil Mint

உணவு கொடுத்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு…! கட்டியணைந்து அன்பை பறிமாறிய குரங்கு…! வைரல் வீடியோ…!

sathya suganthi

அருணா சாய்ராமின் மகள் மரணம்

Tamil Mint

“கவிஞனே நீ சமுத்திரம்!” – வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!

Lekha Shree

பண மோசடி புகார்: காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்

suma lekha

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

ஓலா மின்சார ஸ்கூட்டர் – 2 நாளில் ரூ.1,100 கோடியை தாண்டிய விற்பனை…!

Lekha Shree

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்படும் விராட் கோலி?

Lekha Shree

இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணையும் தனுஷ்? வெளியான கலக்கல் அப்டேட்..!

Lekha Shree

அடடா மழைடா, அடை மழைடா: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் குறித்த 10 சுவாரசிய தகவல்கள் இதோ!

HariHara Suthan