a

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..


இந்தியா தற்போது கொரோனாவின் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை..

இதே போல் தமிழகத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்து பதிவாகி வருகிறது.. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது..

Also Read  கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக வரும் கொரோனோ நோயாளிகளுக்கு இடமில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது..

அந்த மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகள் காக்க வைக்கப்படுகின்றனர். மேலும், குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகளை பொறுத்து, புதிய நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கப்படுகிறது..

Also Read  முதல்வருக்கு வந்த கொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

இதனால் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் இதுகுறித்து பேசிய போது, இன்னும் ஒரு வாரத்தில் முழுமை அடையும் என்றும் கொரோனோ தோற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Also Read  சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

13 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்! 2 பேர் கைது!

Lekha Shree

தமிழக கொவிட் நிலவரம் குறித்து டெல்லிக்கு பரபர அறிக்கை அளிக்கப் போகும் மத்திய குழு

Tamil Mint

பொறியியல், பாலிடெக்னிக் அல்லது பிளஸ் ஒன் தொடர்புடையவரா நீங்க? அப்ப இதை கட்டாயம் படிங்க…

Tamil Mint

ரியல் ஹீரோஸ்! – கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அயர்ந்து அமர்ந்திருக்கும் மருத்துவப் பணியாளர்!

Shanmugapriya

பேஸ்புக்கில் வைரலான தபால் ஓட்டு – தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை கைது!

Lekha Shree

புதுச்சேரியில் இன்று நோ சரக்கு டே

Tamil Mint

பருவ மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது: வானிலை துறை

Tamil Mint

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை… நேற்று ஒரே நாளில் பல கோடி வசூல்..!

Lekha Shree

“இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு” – தமிழக அரசு

Lekha Shree

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint