சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!


சேலம் – சென்னை இடையே எட்டு பசுமை வழிச்சாலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தடையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீடு செய்தது. 

அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. இந்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் இந்த சாலையை  அமைக்க மத்திய அரசு எத்தனித்தது. 

மேலும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் பயண நேரத்தில் இரண்டரை மணி நேரம் குறைக்கும் நோக்குடனும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறியது. 

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சாலை அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பறிக்கப்படும், காடுகள், மலைகள் அழிக்கப்படும் என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்தனர். 

Also Read  தமிழகத்தில் 23ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி.!

இதனையடுத்து இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞர் சூர்யபிரகாசம், பி.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.யுவராஜ், ஆர். செளந்தர்ராஜன் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 

“சென்னை – சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை  நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி உத்தரவிட்டது. 

Also Read  தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என்று பரவி வரும் தகவல் உண்மையா? - சுகாதாரத் துறை விளக்கம்!

மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்கவில்லை. 

Also Read  விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் .

இந்த வழக்கை தொடக்கத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.  கடந்த செப்டம்பர் மாதம், அருண் மிஸ்ரா ஓய்வு பெற்றதை அடுத்து, நீதிபதிகள் கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு விசாரித்தது. 

தற்பொழுது  இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

Tamil Mint

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அறிவித்தார் ஓபிஎஸ்!

Tamil Mint

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு

Tamil Mint

ஊசியை அகற்ற குழந்தையின் விரலை வெட்டிய கொடூரம்..!

Lekha Shree

திருவள்ளுவரை புகழ்ந்த பிரதமர் மோடி… முதலமைச்சர் எடப்பாடியின் ட்வீட் இதோ!

Tamil Mint

பாடப் புத்தகத்தில் கருணாநிதி பெயரை நீக்க ரூ.23 கோடி செலவு!

sathya suganthi

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

சீமானை கலாய்த்த சூர்யாவின் படம்…! ஆதரவாளர்கள் எதிர்ப்பு..!

Lekha Shree

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

suma lekha

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!

Lekha Shree