”மன அழுத்தத்தில் இருந்து என்னை மீட்டவர்கள் இவர்கள்தான்” – மனம் திறந்த சமந்தா.!


தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகை சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

Also Read  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் விஜய் சேதுபதி சந்திப்பு.!

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மிக பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் ஆனது. மேலும், எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சையிலும் சிக்கியது.

இந்நிலையில் சமீபத்தில் சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் கூறியது, ”உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போது தான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மன நிலையில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள் தான். அவர்கள் துணையில் தான் நான் அதிலிருந்து விடுபட்டேன்.

Also Read  பிரிவிற்கு பின் 'மாற்றம்' குறித்து பதிவிட்ட சமந்தா..!

அதோடு நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறதுக்கும் அவர்கள் தான் காரணம்” என்று பேசி இருந்தார்.

இப்படி சமந்தா பேசிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமந்தா மன அழுத்தத்திலிருந்ததற்கு அவருடைய விவாகரத்து தான் காரணம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தற்போது சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழ் இருந்து மேலே ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகாவின் போட்டோ ஷூட்

Jaya Thilagan

அதிமுக நட்சத்திர பேச்சாளரை தட்டித்தூக்கிய பாஜக… அதிர்ச்சியில் ஓபிஎஸ் – இபிஎஸ்…!

malar

“வாடா தம்பி” – வெளியானது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

Lekha Shree

கோலிவுட்டின் பொங்கல் ஸ்பெஷல்!!

Tamil Mint

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

அமீர்கானை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் சோகம்..

HariHara Suthan

“யுவன் ரெடி பண்ணிட்டாரு” – ‘வலிமை’ அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு…!

Lekha Shree

நெட்பிளிக்ஸின் டாப் 10 படங்கள் வரிசையில் இடம்பிடித்த ‘மின்னல் முரளி’ …!

Lekha Shree

‘தளபதி’ பட ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய மம்மூட்டி…!

Lekha Shree

நடிகர் சூரி மலையாளி வேடத்தில் நடிக்கும் வேலன் படத்தின் டப்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

HariHara Suthan

ரஜினி, விஜய், அஜித் பற்றி மனம்திறந்த பிரபல நடிகை…!

Lekha Shree