a

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடிக்க இதுதான் காரணமா?


தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்ததற்கு பணம் தான் காரணம் என ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சமந்தா நடித்த வெப் தொடரில் தமிழர்களும் தமிழ் போராளிகளும் கொச்சைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உண்மைக்குப் புறம்பான பொய்களை தொடர் நெடுக காட்டுவதாகவும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா நடித்த ‘தி பேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் முன்னோட்டம் வெளியான சில நொடிகளில் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழத்தொடங்கியது. காரணம் தமிழர்களை தீவிரவாதிகளை போல சித்தரித்துள்ளது இப்படம் எனவும் தமிழர்களுக்கு எதிரானது இப்படம் எனவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்தத் தொடரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  கடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!

இதனைத்தொடர்ந்து பலர் தமிழ்நாட்டில் வளர்ந்த சமந்தாவுக்கு தமிழர்கள் குறித்து தெரியாமல் போனது எப்படி என்று ஆவேசமாக விமர்சித்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை இயக்குனர் விலாவரியாக கூறினார் அதைக் கேட்டு தான் இந்த தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று சமந்தா தெரிவித்திருந்தார்.

Also Read  நடிகர் பிரித்விராஜ் படத்தில் இணையும் அஜித் பட வில்லன்? வெளியான சூப்பர் தகவல்!

இதில் அவர் ஏற்று நடித்திருந்த ராஜி கதாபாத்திரம் இலங்கை இராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாகவும் அவரது சகோதரர் போரில் கொல்லப்பட்டதாகவும் காட்டப்பட்டிருந்தது தவிர போராளிகள் குறித்த சித்திரம் முழுக்கவே தவறு என்பது தொடரை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா வெப்சீரிஸில் நடிக்க அவர் சொல்வது போல் இலங்கை தமிழர்கள் அனுபவித்த வேதனை காரணம் அல்ல சினிமாவைப் போல் இரண்டு மடங்கு சம்பளம் கிடைத்தால் தான் அவர் நடித்தார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Also Read  "விஷாலுக்கு பயந்து ஓடிய நடிகை யார்?" - காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

திரைப்படத்தில் ஒன்று முதல் ஒன்றரை கோடி வரை சம்பளம் பெறும் சமந்தாவுக்கு இத்தொடருக்கு 3 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறுகின்றனர்.

திரைப்படத்தை விட அதிக சம்பளம் கிடைத்ததே இத்தொடரில் சமந்தா நடிக்க காரணமே தவிர அவர் சொல்வது போல் இலங்கை தமிழர்கள் மீதான பாசம் இல்லை என சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

தாதா சாகேப் பால்கே விருது – நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…

HariHara Suthan

கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் விவேக்…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா? எகிரும் எதிர்பார்ப்புக்கள்…

HariHara Suthan

சர்வதேச விருது பெற்ற ‘கூழாங்கல்’ – மகிழ்ச்சியில் நயன்தாரா

Tamil Mint

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

தமிழ் புத்தாண்டு அன்று போட்டியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! – குஷியில் திரிஷா ரசிகர்கள்!

Shanmugapriya

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்த பிரபல ஹீரோ…!

Lekha Shree