a

தி பேம்லி மேன் 2 : பாரபட்சமான ஈழப்போரின் வலிமிகுந்த நினைவூட்டல் – சமந்தா


தி பேம்லி மேன் திரைப்படத்தில் தான் ஏற்று நடித்த ராஜி கதாபாத்திரம் எப்போதும் தனக்கு நெருக்கம்மானவள் என்று நடிகை சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் அனைத்தையும் படித்தேன் என்றும் மகிழ்ச்சியால் மனம் நிறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட தி பேம்லி மேன் 2 திரைப்படம் குறித்த தனது பார்வை மற்றும் அதன் மூலம் தான் பெற்ற அனுபவங்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார்.

தி பேம்லி மேன் 2 திரைப்படத்தில் நடிக்க தன்னை ராஜன் அணுகியபோது, ராஜி கதாபாத்திரம் மிகவும் சென்சிட்டிவாக மற்றும் சமநிலையுடன் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை தான் உணர்ந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார்.

Also Read  "தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்" - இயக்குனர் பாரதிராஜா

படக்குழு, ஈழப் போரில் பெண்கள் பட்ட கஷ்டங்கள் உள்ளடக்கிய ஆவணப்படங்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டது என்றும் அந்த ஆவணப்படங்களை பார்த்தபோது, ஈழத்தில் தமிழர்கள் பல ஆண்டுகளாக பட்ட கஷ்டங்கள் மற்றும் சொல்ல முடியாத வேதனைகளை அறிந்து தான் அதிர்ச்சியடைந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய ஈழப்போர் குறித்த ஆவணப்படங்களை சில ஆயிரம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர் என்றும் ஈழப்போரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தபோது உலகத்தில் எத்தனை பேர் அதை கவனத்தார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.

Also Read  'வலிமை' படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

ஈழப்போரில் லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்தனர் என்றும் எண்ணற்ற பலர் தொலைதூர நாடுகளில் தஞ்சமடைந்தாலும், உள்நாட்டு சண்டையின் போது ஏற்பட்ட காயங்களும் ரணங்களும் இன்னும் அவர்களின் இதயங்களில் ஆராத தழும்பாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜியின் கதை, கற்பனையானது என்ற போதிலும், பாரபட்மாக நடந்த போரின் வலிமிகுந்த நினைவாகவும் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான மரியாதையாகவும் தான் அதை பார்ப்பதாக சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

Also Read  தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

ராஜியின் கதை, கற்பனை தான் என்ற போதிலும் வெறுப்பு, அடக்குமுறை, பேராசை உள்ளிட்டவற்றிற்கு எதிராக முன் எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒன்றிணைந்து போரிட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாம் அவ்வாறு செய்யத் தவறினால், எண்ணற்றவர்களின் அடையாளங்கள், சுதந்திரம் மற்றும் சுய மரியாதை தொடர்ந்து மறுக்கப்படும் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

“குக் வித் கோமாளி” பிரபலத்தின் Rare திருமணப் புகைப்படம் – இணையத்தில் வைரல்

sathya suganthi

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

‘பிக் பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ படம் குறித்த முக்கிய அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

கமலுக்கு வில்லனாகும் பகத் ஃபாசில்! விக்ரம் படத்தின் அப்டேட் இதோ!

Jaya Thilagan

பாக்ஸ் ஆபீசில் மோதவுள்ள 5 நட்சத்திர திரைப்படங்கள்..! களைகட்டும் 2021..!

Lekha Shree

‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம்…!

Lekha Shree

”வலிமை படம் ரிலீஸ் ஆவதற்குள் இப்படி செய்துவிட்டாயே”: அஜித் ரசிகர் பிரகாஷ் தற்கொலை! #RIPPrakash

Bhuvaneshwari Velmurugan

‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’… தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை…!

malar

பட்டுப்புடவையில் நயன்தாரா, வேட்டி சட்டையில் காதலர் விக்னேஷ் சிவன்… ஃபாரீன் வரை எதிரொலித்த பாரம்பரியம்…!

Tamil Mint

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya