“சொல்லாமல் விடைபெறுவதற்கு மன்னியுங்கள்!” – நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி


மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இன்ற கொல்கத்தா புறப்பட்டார்.

புறப்பட்ட பின்னர், சென்னை உயர்நீதிமன்ற உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். ஆனால், அதனால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

பொதுவாக இப்படி ஒரு நீதிபதி மாற்றப்படுகையில் அவருக்கு பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்கள் தரப்பில் பிரிவு உபசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆனால், அவற்றை தவிர்த்து விட்டு சென்றிருக்கிறார் சஞ்ஜிப் பானர்ஜி. இந்நிலையில், புறப்பட்டு சென்ற பின்னர் அவருக்காக குரல் கொடுத்த, வருந்திய வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Also Read  கத்ரினா-விக்கி கௌஷல் திருமணம்..! - விருந்தினர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு..!

அதில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள என் குடும்பத்தினருக்கு… தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். என்னுடைய நடவடிக்கைகள் உங்களை புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

எனது நடவடிக்கை உயர்நீதிமன்ற நலனுக்காக மட்டுமே. என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்துப் போய் இருக்கிறேன்.

Also Read  தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். அப்படியானவர்கள் திறமையான நிர்வாகத்தை நான் மேற்கொள்ளவும் உதவியுள்ளனர். அதற்கு உறுதுணையாக இருந்த பதிவுத்துறைக்கு நன்றி. இதேபோல் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

எனக்காக நீண்டநேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி. இதுநாள்வரை ஆதிக்கக் கலாச்சாரத்தில் பணியாற்றியுள்ளீர்கள். அதை முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை.

Also Read  இந்திய கிரிக்கெட்டில் எழுந்த முதல் பெண் குரல் மறைந்தது

இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டிருக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்” என எழுதியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

Lekha Shree

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு டிக்கெட் பெறலாம் – ரயில்வே நிர்வாகம்

Tamil Mint

“இரு தரப்பு உறவு மேம்பட, இரண்டு தரப்புமே முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” – சீனா

Tamil Mint

முதல்வர் பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடியில் தொடங்கினார்

Tamil Mint

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

sathya suganthi

இரவு நேர ஊரடங்கு – பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

Lekha Shree

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு! – முழு விவரம்

Shanmugapriya

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

கிடு கிடுவென குறையும் தங்கத்தின் விலை

Tamil Mint

“பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree