சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்…!


உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவிவகித்து வந்த சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி 4ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

Also Read  "சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்?" - மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

இந்நிலையில் இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

அப்போது 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான இவரை 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கும் கடிதம் அனுப்பினார்கள்.

Also Read  வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மௌனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Also Read  'நேற்று தனுஷ்.. இன்று கனிமொழி..!' - தமிழகத்தில் தொடரும் நீட் தற்கொலைகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்

Tamil Mint

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

திருப்பூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்…! அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!

Lekha Shree

‘கோயில்களை பாதுகாக்க, அவற்றை தமிழக அரசு பக்தர்களிடம் கொடுக்க வேண்டும்’ – சத்குரு

Shanmugapriya

போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது

Tamil Mint

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

Lekha Shree

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவே முதல்முறை… அப்படி என்ன நடக்க போகிறது?

suma lekha

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார்!

Tamil Mint

கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற விவகாரம்: 1 வருடத்திற்கு பின் சரணடைந்த குற்றவாளி..!

Lekha Shree

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! – நடந்தது என்ன?

Lekha Shree