“திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது சரியல்ல!” – நடிகர் சந்தானத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!


நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் பல ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இப்படத்திற்கும் சூர்யாவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Also Read  '100 மில்லியன்' பார்வைகளை கடந்த 'தாராள பிரபு' பாடல்…!

இந்நிலையில், நடிகர் சந்தானம் “திரைப்படங்களில் ஒருவரை உயர்த்திக் காட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்துவது சரியல்ல” என கூறியுள்ளார்.

மேலும், சந்தானம் பாமக கட்சியின் நிறுவனருடன் ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆனது.

இதனால், அவரை வசைபாடி சூர்யா ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால், #சாதிவெறி_சந்தானம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேகின் கீழ் பலர், “இவ்வளவு நியாயம் பேசும் சந்தானம் அவர் படங்களில் காமெடி என்ற பெயரில் மற்றவரை தாழ்த்துவது சரியா?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Also Read  பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண வைபோகம்; சூப்பர் பிரமோ இதோ!

இன்னும் சிலர், “திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் வந்தபோது கோமாவில் இருந்தீர்களா? எனவும் கேட்டு வருகின்றனர்.

இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பினாலும் சிலர், “அவர் கருத்தில் என்ற குற்றமும் இருப்பதாக தெரியவில்லை” என கூறுகின்றனர்.

Also Read  வலிமை பட அப்டேட்... டீசர் வெளியீட்டு தேதி குறித்து முடிவு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பப்ஜி மதன்… பிட்காயின்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

Lekha Shree

தளபதி 66 அப்டேட்… விஜய்க்கு வில்லனாகும் நானி?

suma lekha

ஜி.கே. வாசனுக்கு முதல்வர் வாழ்த்து

Tamil Mint

மீம்ஸ்களை நிஜமாக்கிய ஆண்…! பெண் போல் வேடமிட்டு பஸ்ஸில் பயணம்…!

sathya suganthi

‘பொற்காலம் மீண்டும் வருகிறது!’ – ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு..!

Lekha Shree

பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் – குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Tamil Mint

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

21 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி…!

Lekha Shree

கொரோனா குறித்த தமிழக தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

“மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint