சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது


சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமக தலைவர் சரத்குமாருக்கு ஐதராபாத்தில் எந்தவித அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்தும் விரைவில் மீண்டு வருவார். தற்போதைய சூழ்நிலை காரணமாக வரும் 13ம்தேதி சரத்குமார் செல்லவிருந்த தென்காசி, தூத்துக்குடி பயணமும், சென்னையில் 16ம்தேதி நடைபெறவிருந்த உயர்மட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது. வீண் வதந்திகளை நம்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read  கட்டுக்கடங்காமல் சுற்றும் மக்கள்…! வாகன சோதனையை தீவிரப்படுத்தும் தமிழக அரசு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Lekha Shree

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Mint

பதிலடி கார்ட்டூனாம்-சுதீஷ் விளக்கம்

Tamil Mint

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – வைரலாகும் மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi

இன்றைய தலைப்புச் செய்திகள் | 28.05.2021

sathya suganthi

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை..!

Lekha Shree

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Tamil Mint