சரத்குமார்-ஜிப்ரான் இணையும் வெப்சீரிஸின் டைட்டில் இதுதான்…! யார் இயக்குனர் தெரியுமா?


ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கிய அதே நிலையில் தமிழில் வெப்சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை காணமுடிகிறது.

முன்னதாக பரத், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்த ‘டைம் என்ன பாஸ்’ என்கிற வெப்சீரிஸ் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதற்கு முன்னதாக ஜீ5 தளத்தில் ‘ஆட்டோ சங்கர்’ வெப்சீரிஸ் வெளியானது. பின்னர் முன்னணி இயக்குனர்களும் ஓடிடி தளங்களில் வெப்சீரிஸ்களை இயக்கத் தொடங்கினர்.

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் இயக்கிய பாவ கதைகள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

Also Read  மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

அதைத்தொடர்ந்து அண்மையில் தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ என்கிற வெப்சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சீரிஸை அறிமுக இயக்குனர் இந்திரா சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். இதேபோல் காஜல் அகர்வாலின் லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

Also Read  குழந்தைகளுடன் ஜாலியாக விளையாட நடிகர் அல்லு அர்ஜுன்! - வைரலாகும் வீடியோ

இந்த சீரிஸை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் புதிய வெப்சீரிஸ் தொடர்பான மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

இன்று இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read  கமலின் 'விக்ரம்' படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர்…!

இதில் சரத்குமார் நாயகனாக நடிக்கிறார். தூங்காவனம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இந்த வெப்சீரிஸை இயக்குகிறார்.

ஜிப்ரான் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த சீரிஸுக்கு ‘இறை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி-தனம் திருமண புகைப்படங்கள்…!

Devaraj

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

காளைகளுடன் பழகும் நடிகர் சூர்யா! வாடிவாசல் அப்டேட் இதோ..!

HariHara Suthan

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

Lekha Shree

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட புகைப்படம் வைரல்..!

Lekha Shree

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணையும் பாடகி சின்மயி-யின் கணவர்..!

HariHara Suthan

‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

Lekha Shree

‘காசேதான் கடவுளடா’ – மிர்ச்சி சிவா-யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் இணைந்த சிவாங்கி..!

Lekha Shree

“அட்ரா சக்க!” – ஷாருக் கான்-அட்லீ இணையும் பாலிவுட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!

Lekha Shree

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

‘தளபதி 65’ பர்ஸ்ட் லுக்: விஜய் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் கொண்டாட்டம்!

Lekha Shree