அமேசான் பிரைமில் வெளியாகும் ‘சார்பட்டா பரம்பரை’ – வெளியீட்டு தேதி அறிவிப்பு!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய கதை தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்திற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு, இறுதி கட்ட பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் உள்ளது.

இதனால் முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

Also Read  ”கர்ணன் படத்தில் தனுஷை பார்த்த போது..” - பரியேறும் பெருமாள் தங்கராசு பகிர்ந்த சீக்ரெட்!

அதில் அமேசான் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் படக்குழுவினர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர்.

தற்போது அமேசான் நிறுவனம் சார்பட்டா படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஜூலை 22ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

Also Read  கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர் படத்தின் படப்பிடிப்பு!

மேலும், விரைவில் இப்பட ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சன நடராஜன், துஷாரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

Also Read  அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் குறித்து வலியுறுத்தும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint

விதவையான கேமரா…! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

Devaraj

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினுக்கு ‘தளபதி’ விஜய் தரப்பில் இருந்து கிடைத்த உதவி!

Lekha Shree

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கவினுடனான காதல் என்ன ஆச்சு?… ரசிகரின் கேள்விக்கு கோபம் கொந்தளிக்க பதிலளித்த லாஸ்லியா…!

Tamil Mint

தமன்னாவின் முதல் தமிழ் வெப்சீரிஸ் இன்று ரிலீஸ்…!

Lekha Shree

சூர்யா வழியில் ஆர்யா… மனைவிக்காக விரைவில் செய்யப்போகும் தரமான சம்பவம்…!

malar

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan