a

சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் மீண்டும் பரபரப்பு…!


கட்சியை தலைமையேற்று வழிநடத்த நிச்சயம் வருவேன், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேசிய மற்றொரு ஆடியோ வெளியானதால் மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது ஆதரவு அதிமுகவுக்காக டிடிவியின் தினகரனின் அமமுகவிற்காக என்ற குழப்பத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா நடராஜன் அறிவித்திருந்தார்.

Also Read  கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா காலமானார்

இந்த நிலையில், கொரோனா முடிஞ்சதும் அரசியலுக்கு மீண்டும் வந்துருவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ, தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

இந்த ஆடியோ மூலம் சசிகலா மீண்டும் தமிழக அரசியல் களத்திற்கு வருவார் என்பது உறுதியாகி உள்ளது என அவரது தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Also Read  தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

இந்த நிலையில், கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன் என்று சசிகலா பேசியதாக இரண்டாவது ஆடியோ வெளியானது.

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை தன்னால் பார்க்க முடியாது என்றும அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அந்த ஆடியோவில் சசிகலா தெரிவித்திருந்தார்.

பின்னர், இதுகுறித்து கூறிய எடப்பாடி பழனிசாமி, “சசிகலா அதிமுகவிலேயே இல்லை” என அதிரடியாக கூறினார்.

இந்நிலையில், தற்போது அவர் பேசியுள்ளதாக கூறி 3வது ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Also Read  சட்டமன்ற தேர்தல் 2021.. பாமக வெற்றி பெற்ற தொகுதிகள் இவை தான்..

அதில், “கட்சியை தலைமையேற்று வழிநடத்த நிச்சயம் வருவேன், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேசிய மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.

இதனால் மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

உறவினர்களுக்கு இ-டெண்டர் அளிக்கப்படும் மாயம் என்ன? கமல் கேள்வி

Devaraj

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint

“கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும்”

Tamil Mint

“திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது” – சீமான்

Tamil Mint

கண் தானம் செய்வதாக எடப்பாடி அறிவிப்பு

Tamil Mint

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் நாளை தீர்ப்பு.!

Tamil Mint

சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

Lekha Shree

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

Lekha Shree

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Devaraj

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint