a

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அச்சமயம் சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் சசிகலாவின் அரசியல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவு, தன் உடன்பிறவா சகோதரி ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்திய அதிமுகவுக்காக அல்லது தனக்காக அமமுக என்ற கட்சியை உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக்கி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தினகரனுக்காக என்ற குழப்பத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா நடராஜன் அறிவித்திருந்தார்.

Also Read  அமமுக-தேமுதிக கூட்டணி! - விஜயகாந்த் வென்ற தொகுதியில் களம் காணும் பிரேமலதா!


அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், கோயில், குளம் என தனது ஆன்மீக பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார் சசிகலா.


இந்த நிலையில், கொரோனா முடிஞ்சதும் அரசியலுக்கு மீண்டும் வந்துருவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ, தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

Also Read  சசிகலாவின் திடீர் முடிவுக்கு இவர் தான் காரணம்... குற்றம்சாட்டும் திவாகரன்!


இது தொடர்பாக தனது தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசியதன் முழு விவரம் இதோ…!


சசிகலா : ஹலோ லாரன்ஸ் நல்லா இருங்கீங்களா?


தொண்டர்: நல்லா இருக்கோம்மா… உங்க குரல கேட்கவே சந்தோஷமாக இருக்குமா


சசிகலா: வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா?


தொண்டர்: எல்லோரும் நல்லா இருக்கோம்மா,


சசிகலா: சரி சரி… ஒன்னும் கவலைப்படாதீங்க… கண்டிப்பா கட்சியை சரி பண்ணிறலாம். எல்லோரும் தைரியமாக இருங்க… இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன். கவலைப்படாதீங்க

Also Read  தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு! ஒரே கட்டமாக தேர்தல்!


தொண்டர்: உங்க பின்னாலே தான் நாங்க இருப்போம்.


சசிகலா: சரி சரி….கொரோனா நேரம், எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க, நிலைமை மோசமாக இருக்கு. நிச்சயம் வந்திருவேன்

இந்த ஆடியோ மூலம் சசிகலா மீண்டும் தமிழக அரசியல் களத்திற்கு வருவார் என்பது உறுதியாகி உள்ளது என அவரது தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!

sathya suganthi

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

“பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு வரி வசூலில் தீவிரம் காட்டுகிறது” – ராகுல் காந்தி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திடீர் பரபரப்பு – பாமக வேட்புமனுக்கள் வாபஸ்!

Lekha Shree

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

sathya suganthi

சமூக பொறுப்புணர்வுக்கான தங்க மயில் விருது – தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் வென்றது

sathya suganthi

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் யார் யார்?

Devaraj

பாரதிராஜாவுக்கு மீரா மிதுன் பதிலடி

Tamil Mint

‘லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

Lekha Shree

சென்னை: 74 குழந்தைகளுக்கு கொரோனா…!

Lekha Shree