“சென்னையின் நிலைக்கு திமுக ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் காரணம்!” – சசிகலா


சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் திமுக ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் காரணம் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் சென்னையின் தற்போதைய நிலைக்கு காரணம்” என குற்றம் சாட்டி இருந்தார்.

Also Read  தி நகரில் அலைமோதும் மக்கள், பீதியில் அதிகாரிகள்

இந்த நிலையில் சென்னை வெள்ளம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆட்சியாளர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட செல்வதால் அதிகாரிகளால் பாதிப்புகளை சரி செய்வதில் கவனம் செலுத்த முடிவதில்லை.

Also Read  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 25ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்…!

ஆட்சியாளர்களுக்கு வரைபடம் காட்டி விளக்கம் அளிப்பதில் அதிகாரிகள் நேரத்தை செலவிடுகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அதிமுக தொண்டர்களும் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

Also Read  9,11ம் வகுப்புகளுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடக்கம்

பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணம் திமுக ஆட்சிக் காலங்களில் தொலைநோக்கு பார்வை இல்லாமல் நகரத்தின் முக்கிய சாலைகளில் கட்டப்பட்ட பாலங்கள் தான் என்று மக்கள் கருதுகின்றனர்” என சசிகலா கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடர் கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழுவிவரம் உள்ளே..!

Lekha Shree

PSBBயில் “கோயில் தீர்த்தம்” கொடுத்து அத்துமீறல் – அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

sathya suganthi

நீட் ஆய்வு குழுவுக்கு அனிதாவின் தந்தை எழுதிய கடிதம்!

sathya suganthi

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்!

Tamil Mint

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

தமிழகத்தில் முதல்முறை – பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

Lekha Shree

கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!

sathya suganthi

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

Tamil Mint

தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் – தமிழக அரசு

Tamil Mint

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் – காரணம் இதுதான்…!

sathya suganthi

8 மாவட்டங்கள்….! எல்லா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வாஷ்அவுட்…!

sathya suganthi