‘சசிகலா 2.0!’ – ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா..! பாதுகாப்பு கேட்டு மனு..!


அதிமுகவின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வரும் 16ம் தேதி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு இடங்களில் சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார்.

இதற்காக உரிய பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். மேலும், சட்டமன்ற தேர்தலின்போது அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு சிலர் கூறிவந்தனர்.

Also Read  வினோத திருட்டு.... மக்களே உஷார்..... காரில் உலாவரும் நாய்கள்... கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்...

இதுதொடர்பாக தொண்டர்களிடம் சசிகள தொலைபேசி மூலம் பேசிய பல ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதில், “எல்லாரும் அதிமுக பிள்ளைகள்தான். எம்ஜிஆர் எப்போதுமே கட்சி வித்தியாசம் பார்க்க மாட்டார். அதிமுக தொண்டர்களின் இயக்கம். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய் போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன். எல்லோரையும் சந்திக்கிறேன். கவலைப்படாதீர்கள்” கூறியிருந்தார்.

Also Read  பெகாசஸ் உளவு விவகாரம் - மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மறுப்பு..!

இந்நிலையில், அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 16ஆம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

இதற்காக பாதுகாப்பு கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின்!

அதைத்தொடர்ந்து அடுத்த நாளான அக்டோபர் 17ஆம் தேதி திநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளார் சசிகலா.

இதற்காக பாதுகாப்பு அளிக்க கோரி மாம்பலம் காவல் ஆய்வாளரிடம் சசிகலா தரப்பில் மற்றொரு மனு அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், சசிகலாவின் இந்த நகர்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பலி நின்றால் தான் கோயில்கள் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு அதிரடி…!

sathya suganthi

“முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாகம்” – ஆளுநர் உரையின் முழு தொகுப்பு…!

sathya suganthi

ஆபாச வார்த்தைகள்… லட்சக்கணக்கில் பணம்..! மதன் ஓபி-யின் பகீர் பின்னணி!

Lekha Shree

நாமக்கல் மாவட்டத்தில் நோட்டாவிடம் தோற்ற 116 வேட்பாளர்கள்…!

sathya suganthi

சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு; இல்லத்தரசிகள் கலக்கம்!

Bhuvaneshwari Velmurugan

முதலமைச்சரின் படம் இடம்பெறாத அரசு சான்றிதழ்! – குவியும் பாராட்டுக்கள்!

Lekha Shree

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

Lekha Shree

ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

Tamil Mint

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 397 பேர் பலி!

Lekha Shree

“12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

“என் பாட்டியின் PSBB பள்ளிப் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்!” – மதுவந்தி அதிரடி

sathya suganthi