“விரைவில் சந்திப்போம்!” – அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா அறிக்கை..!


தொண்டர்கள் அனைவரையும் விரைவில் நேரில் சந்திக்க இருப்பதாக சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித்தலைவராலும் புரட்சித்தலைவியாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இயக்கம்.

Also Read  சசிகலாவின் அரசியல் பயணம்...செக் வைத்த பாஜக.. குஷியில் எடப்பாடி..!

ஏழை எளியவர்களின் வாழ்வு வளம்பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழிவந்த என் உயிர் தொண்டர்களுக்கும் என்னை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள.

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோட புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Also Read  இந்தி மொழி விவகாரம்: மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட Zomato..!

அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால்… தாங்கள் வாழ்கின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் தற்போது கொரோனா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து விட்ட வர்களுக்கும் மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தால் அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக் கொள்கிறேன்.

உங்கள் அனைவரது ஒற்றுமையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும். உங்களை எல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கு நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

Also Read  விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

இவ்வாறு தொண்டர்கள் அனைவரையும் விரைவில் நேரில் சந்திக்க இருப்பதாக சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்..!

Lekha Shree

சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் செல்போனில் பேச்சு : அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்…!

sathya suganthi

திமுகவின் மூத்த தலைவர் மறைந்தார்

Tamil Mint

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ், சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்

Tamil Mint

தமிழக பொருளாதாரத்தை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன: முதல்வர்

Tamil Mint

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவிற்கு பலி.!

Tamil Mint

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

Lekha Shree

‘உரிமைத்தொகை’ குறித்த காயத்ரி ரகுராமின் ட்வீட்… கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..!

Lekha Shree

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா தாக்கல்..!

Lekha Shree