மதுசூதனன் உடல்நலம் குறித்து சசிகலா நேரில் நலம் விசாரிப்பு…!


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து சசிகலா நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அதிமுக கோடி கட்டிய காரில் சென்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் சசிகலா இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் அவர் அதிமுக கோடி கட்டிய காரில் வந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அப்போலா சென்றிருக்கும் நிலையில் சசிகலாவும் மதுசூதனனை சந்திக்க அங்கு சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read  செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மதுசூதனன். இவர் ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் அவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு முதலில் ஆதரவளித்தவர் மதுசூதனன்.

Also Read  டவ்-தே புயல் - 7 மாவட்டங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

இவருக்கு சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுசூதனனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read  அனைவருக்கும் இ-பாஸ் அமலுக்கு வந்தது, அதிக அளவில் சென்னைக்கு திரும்பும் மக்கள்

தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவரை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அப்போலா சென்றிருக்கும் நிலையில் சசிகலாவும் மதுசூதனனை சந்திக்க அங்கு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

ஊரடங்கில் மேலும் தளர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

sathya suganthi

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

“நான் தினமும் மாட்டு சிறு நீரை குடிக்கிறேன்” – பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

Shanmugapriya

இன்றைய தலைப்புச் செய்திகள் | 01.06.2021

sathya suganthi

ஜனவரியிலேயே சுடும் சூரியன்… மே மாதம் எப்படி?

Tamil Mint

தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? – ஜெயக்குமார் விமர்சனம்..!

Lekha Shree

ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் இந்தி திணிப்பா? புதுக்கோட்டையில் பரபரப்பு

Tamil Mint

அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன்… சற்று முன் சசிகலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

HariHara Suthan

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

Lekha Shree

தமிழகத்திலேயே சென்னையில் தான் குறைவான வாக்குப்பதிவு – தொகுதி வாரியான விவரம் இதோ…!

Devaraj