அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா..!


அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சிக்குள்ளேயே பூசல் ஏற்பட்டுள்ள இந்நேரத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வந்ததில் இருந்து அதிமுகவில் அவர் இணைவது குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

இதற்கிடையில் சசிகலாவின் சேர்ப்பு குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் கருத்துக்களும் வேறுவேறாக இருந்ததால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

Also Read  அண்ணா அறிவாளயத்தில் வெற்றி கொண்டாட்டம்: காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்!

இந்நிலையில், தற்போது சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும் தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read  நிவாரண பணிகளில் மிக வேகமாக சுழன்று பணியாற்றிய பல மூத்த அமைச்சர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கிறார்களா? அதிர்ச்சியில் அதிமுக

பெருந் தொற்றான கொரோனா எனும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளித் திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் தடுப்பூசிகளும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோஷத்துடன் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடி வர இன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை.

Also Read  பாரதியாரின் 100 வது நினைவு தினம்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் திழைக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமாவளவன் இருக்கை மேல் நடந்து சென்றது ஏன்? – வன்னியரசு விளக்கம்

Lekha Shree

சசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என்று வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tamil Mint

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi

வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை

Tamil Mint

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

Ramya Tamil

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை – தமிழக அரசு

Lekha Shree

இதற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்! – உண்மையை போட்டுடைத்த கமல்!

Shanmugapriya

நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree