a

“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” என எழுப்பப்படும் குரல்கள் – பின்ணணி என்ன?


கேரள மக்கள், எழுத்தாளர்கள் மற்றும் கேரள நடிகர்கள் என பலர் தற்போது லட்சத்தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றும் பிரஃபுல் படேல் மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள் SaveLakshadweep என்ற ஹேஸ்டேக் உடன் லட்சத்தீவிற்கான தங்களின் ஆதரவு முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள்.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு கேரளக் கரைக்கு 200 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது. இங்கு 65,000 பேர் வாழ்கின்றனர். மேலும், 96 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்த இடத்தின் மொத்த பரப்பு 32 சதுர கிலோமீட்டர்.

வெண்மையான மணல் பரப்புடன் கூடிய கடற்கரை, அமைதியான அலைகள், தென்னைமரங்கள் சுற்றி அழகிய கடல், சுத்தமான காற்று என இயற்கை குடிகொண்டுள்ள ஒரு அழகிய இடம்.

மீன்பிடித்தொழில் தான் இந்த தீவில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம். சுற்றுலா மூலமும் மக்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

கொரோனா பரவலுக்கு பிறகு மிகவும் நேர்த்தியான வழிமுறைகள் இங்கு பின்பற்றப்பட்டது. இதனால், 2021 ஜனவரி மாதம் வரை இந்த தீவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை. ஆனால், தற்போது பல பிரச்சினைகள் இங்கு எழுந்துள்ளது.

Also Read  இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரம் காட்ட காரணம் என்ன…? விரிவான தகவல்கள்…!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை லட்சத்தீவு நிர்வாகியாக ஐபிஎஸ் தினேஷ் ஷர்மா செயல்பட்டு வந்தார். இவர் காலமானதை அடுத்து பிரஃபுல் படேல் என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது இந்திய அரசு.

இதற்கு முன்பு வரை லட்சத்தீவு நிர்வாகியாக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அவர் கொண்டு வந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் மக்களைப் பெரிதும் கவலை அடையச் செய்திருக்கிறது.

தொடக்கத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தினார். கொரோனா பரிசோதனையின் போது நெகட்டிவ் என்று வந்தால் 48 மணி நேரத்திற்குள் லட்சத்தீவிற்குள் மக்கள் நுழையலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனால், கொரோனா பாதிப்பே இல்லாமல் இருந்த லட்சத்தீவில் தற்போது 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி இங்கு கொலை, குழந்தை கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படவில்லை. ஆனால் தற்போது குண்டர் சட்டத்தை இங்கு அமல் படுத்தியுள்ளார் புதிய நிர்வாகி.

அரசு நிறுவனங்கள், விவசாயம், கல்வி நிறுவனங்களில் சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நீக்கியுள்ளது. தங்களுக்கு சாதகமானவர்களை மட்டும் பொறுப்பில் வைத்துக் கொண்டுள்ளது.

Also Read  "இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது" - உலக சுகாதார அமைப்பு

முஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறியை தடை செய்துள்ளது அங்குள்ள முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பள்ளிகளிலும் அசைவ உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவில் மட்டும் மது பானங்களுக்கு தடை நிலவி வந்தது. ஆனால் தற்போது சுற்றுலாவை மையப்படுத்தி மதுபான விற்பனையை தொடங்க முடிவெடுத்திருக்கிறது அந்த அரசு.

சமீபத்தில் செவிலியர்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போது கூட பிரச்சினையை கேட்காமல் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டது.

இப்படி பல பிரச்சனைகள் லட்சத்தீவில் தொடர்வதை அடுத்து அங்குள்ள மக்கள் தங்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசும், நரேந்திர மோடியும் செயல்படுகிறார்கள் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நடிகர் பிரித்விராஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இருந்து லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றோம். பின் ‘அனார்கலி’ படத்திற்காக அங்கு சென்று உள்ளேன். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருக்கிறேன்.

Also Read  பச்சை, மஞ்சை, வொயிட், ரோஸ் - இணையத்தில் வைரலாகும் பச்சை பூஞ்சை ட்ரோல்ஸ்!

நண்பர்களும் நினைவுகளும் அங்கு கிடைத்தது. என்னுடைய முதல் இயக்கத்தில் வந்த ‘லூசிஃபர்’ படத்தின் போதும் அங்கு சென்றேன். எல்லாம் அங்குள்ள இனிமையான மக்கள் இல்லையென்றால் நடந்திருக்காது.

சமீபகாலமாக அங்குள்ள மக்கள் அங்கு நடைபெறும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து என்னிடம் கூறி வருகின்றனர். இங்கு நடக்கும் பிரச்சினைகளை பொதுவெளியில் வெளிப்படுத்துங்கள் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் நான் இதைப்பற்றி எந்த கட்டுரையும் எழுதப்போவதில்லை. அங்கு நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் ஆன்லைனில் இருக்கிறது. அதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த மாற்றங்கள் நிச்சயம் அங்குள்ள மக்களுக்கு ஏற்றதல்ல என நம்புகிறேன். நம் அரச கட்டமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறது. அதே போல மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

அங்குள்ள மக்கள் புது அதிகாரியினால் மகிழ்ச்சியாக இல்லை. எல்லாவற்றையும் விட செயல் தான் சிறந்தது என கருதுகிறேன். ஆகவே அங்கு உள்ள பிரச்சினையை பற்றி அந்த மக்களிடம் அரசு கேட்க வேண்டும். இந்த உலகில் லட்சத்தீவு ஒரு நல்ல இடம். நல்ல மனிதர்களும் அங்கு வாழ்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்ற எதிரொலி – மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

Tamil Mint

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் – மத்திய அரசு

Devaraj

மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல்க்கு ஆப்பா?

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil

மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

sathya suganthi

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint

உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

Shanmugapriya

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் 2-ம் டோஸ் செலுத்தும் பணி தீவிரம்! தமிழகத்தில் 13,191 தடுப்பூசி மருந்துகள் வீண்!

Tamil Mint

பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

Tamil Mint

முடிவுக்கு வரும் ஊரடங்கு! எங்கு தெரியுமா?

Lekha Shree