எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் கொள்ளை – மேலும் ஒருவர் கைது : சொகுசு வீடு, நிலம் வாங்கி குவிப்பு


சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறி வைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது.

எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் வசதி கொண்ட சிடிஎம் இயந்திரங்களை குறி வைத்து ஒரே பாணியில் கடந்த 15-ம் தேதியிலிருந்து 18-ம்தேதிக்குள் அடுத்தடுத்து சுமார் ரூ.1 கோடி வரை சுருட்டியுள்ளனர்.

அந்த கும்பலை பிடிப்பதற்காக அரியானாவில் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தனிப்படை போலீசார் முகாமிட்டிருக்கிறார்கள்.

கொள்ளையர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

ஏற்கனவே 2 கொள்ளையர்களை கைது செய்த நிலையில் தற்போது 3வது கொள்ளையனையும் அரியானாவில் கைது செய்திருப்பதாக அங்கிருக்கும் தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே அமீர் அர்ஷ் மற்றும் வீரேந்தர் என்ற 2 பேரையும் அரியானாவில் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read  பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி - அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

இதில் அமீர் அர்ஷிடம் தொடர்ந்து 4வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவரை 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர் எஸ்பிஐ வங்கிஏடிஎம்-ஐ குறிவைத்து கொள்ளையடித்து எப்படி என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர், தங்களது குடும்பம்பாரம்பரியமாக கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளதாகவும், நிலங்களை வாங்கி குவித்துள்ளதாகவும், கால்நடை வளர்ப்பு பணியில் ஈடுபட்டதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

Also Read  27 மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் இடமாற்றம்...!

இரண்டாவதாக கைது செய்யப்பட்ட வீரேந்திரன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் தற்போது 3வது கொள்ளையனும் சிக்கியிருக்கிறான்.

மேலும், இந்த கொள்ளையில் மொத்தம் 9 பேர் ஒரே குழுவாக, ஒரு நபரின் தலைமையின்கீழ் செயல்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளைக் கும்பல் தலைவன் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 7 பேரை தொடர்ந்து தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அண்ணா பல்கலை., முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்

Tamil Mint

கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் – வானிலை மையம்

Devaraj

சட்டமசட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு! ஷாக்கான திமுக!

Jaya Thilagan

கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

Lekha Shree

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

சுட்டெரிக்கும் வெயில்… அச்சுறுத்தும் கொரோனா… கலக்கத்தில் திமுக…!

Lekha Shree

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுவில் விடைத்தாளில் கைரேகை பதிவு செய்யும் புதிய முறை அமல்!!

Tamil Mint

ஜெயலலிதா வீடு: தீபக் கிளப்பும் புது பூதம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Lekha Shree

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் – மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

Devaraj

ஓடிடி தளங்களை இனி அரசு கேபிள் டிவி மூலம் காணலாம்?

Lekha Shree