a

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்


தஞ்சை அருகே அம்மாப்பேட்டையில் 56 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளிக்கு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது விடுமுறை காரணமாக அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை மட்டும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி 1,100 மாணவிகள் வரை தினசரி பள்ளிக்கு வந்து கல்வி கற்றுச் சென்றனர்.

Also Read  இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - உலக நாடுகளுக்கு கிரேட்டா தன்பெர்க் கோரிக்கை…!


இந்த நிலையில், பள்ளியில் ஒரு மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருடன் சக மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம், 460 பேருக்கு பரிசோதனை செய்ததில் 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பு - மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!


இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதனிடையே பள்ளியில் உள்ள அனைத்து அறைகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு பள்ளிக்கு 2 வாரத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!

Devaraj

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

உயிருக்கு ஆபத்து என்று பிரபல திரைப்பட இயக்குனர் ட்விட்

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

Lekha Shree

மருத்துவ படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு வேண்டாம்: ஸ்டாலின்

Tamil Mint

வெறும் 4 நாட்கள் மட்டும் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்குமா?

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

அதிமுக Vs திமுக…! – நேருக்கு நேர் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

Devaraj

பெண்கள் விவகாரம்: மோடியை சாடிய கனிமொழி எம்.பி.,!

Lekha Shree

கோயில் வளாகத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த ஜோதிடர்: திடுக்கிடும் தகவல்கள்

Tamil Mint

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan