கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது


கோவை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவிக்கு சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக கடிதம் ஒன்றும் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Also Read  லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ...... கைது செய்த காவல்துறை....

இதற்கிடையில் சின்மயா பள்ளி முதல்வர் கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவி தற்கொலை விவகாரத்தில் சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் இருந்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர் அழைத்து வரப்படுகிறார்.

Also Read  எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் கொள்ளை - மேலும் ஒருவர் கைது : சொகுசு வீடு, நிலம் வாங்கி குவிப்பு

சின்மயா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடியரசு தின வாழ்த்து: தவறான தேசியக் கொடியை பதிவிட்ட நடிகை குஷ்பு – மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவு!

Tamil Mint

ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

பிரியாவிடை பெற்ற பன்வாரிலால் புரோஹித்.!

suma lekha

பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற தடை – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் முதல்வர்

Tamil Mint

கரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

Lekha Shree

வங்கக்கடலில் உருவாகும் புயல்… தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!

Lekha Shree

“கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன?” – ஜெயக்குமார் கேள்வி

Lekha Shree

மக்கள் நீதி மைய மூத்த தலைவர் கொரோனாவால் மரணம்

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Tamil Mint

விஷாலுக்கு ரூ.2கோடி கட்ட வருமானவரித்துறை நோட்டீஸ்…?! டிடிஎஸ் கட்டாமல் மோசடியா?! தப்பிக்க பெண் ஊழியர் மீது கையாடல் புகாரா?

Tamil Mint