கல்விக் கட்டணம் செலுத்தாததால் தகாத வார்த்தைகளால் திட்டிய ஆசிரியர்கள்? தற்கொலைக்கு முயன்ற மாணவி..!


கல்விக் கட்டணத்தை செலுத்தாததால் ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகவும் இதனால் மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் இடங்கணசாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் திசைவிளக்கு பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தாததால் ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மாணவிகளை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

Also Read  தமிழகத்தில் ஒரே நாளில் 1,562 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.!

இதையடுத்து பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து மாணவி தரப்பில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவியின் தாய் கூறுகையில், “எங்கள் குடும்பம் விவசாய கூலி வேலை செய்து இரண்டு குழந்தைகளை சுவாமி விவேகானந்தா தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும் எனது மகளை பணம் கட்டச்சொல்லி பள்ளி ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார்.

Also Read  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்!

மேலும், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து எனது மகள் தற்கொலைக்கு முயன்றாள். மேலும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு என்பதால் பணம் கட்டவில்லை என்றால் பொது தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று மிரட்டியதால் என் மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளாள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உரிய விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read  "இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைக்கும்" - போலீசுக்கு ஷாக் கொடுத்த கும்பல்!

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கூறுகையில், “எந்த குழந்தைகளையும் தாக்கவில்லை. மிரட்டவில்லை. சம்பந்தப்பட்ட மாணவியர் இருவருக்கும் இதுவரை இந்த ஆண்டுக்கான பள்ளி கட்டணம் 300 ரூபாய் மட்டுமே செலுத்தி உள்ளனர்.

பள்ளி கட்டண தொகை கட்ட முடியாது என அந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு உள்ளே அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் ஷியாம் கைது!

Tamil Mint

மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

Tamil Mint

இன்று பிரதோஷம்: ஆன்லைன் மூலம் சிவ தரிசனம் செய்யலாம்

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…!

Lekha Shree

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா!!!

Lekha Shree

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., காரில் கட்டுக்கட்டாக பணம் – ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை…!

Devaraj

கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி…! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்…!

sathya suganthi

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் தினகரன் மகளுக்கு பிரமாண்ட கல்யாணம்

Tamil Mint

நிபா வைரஸ்: தமிழகத்தில் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

Lekha Shree

களைகட்டிய டாஸ்மாக்….! முதலிடம் பிடித்த சென்னை…! ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு விற்பனையா..!

sathya suganthi

பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்! முழு விவரம்!

Lekha Shree

யுவனின் குரலில் ‘வென்று வா வீரர்களே’..! பாடலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

Lekha Shree