ஆசிரியர் தந்த பாலியல் தொல்லை…. தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி…!


பள்ளி ஆசிரியர் தந்த பாலியல் தொல்லை காரணமாக 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கோவை ஆர். எஸ். புரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Also Read  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - தனிப்படை அமைப்பு..!

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அலறியுள்ளனர்.

இது குறித்து உக்கடம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணையில் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்தது தெரியவந்துள்ளது.

Also Read  சென்னையில் அதிகரிக்கும் 'ரூட்டு தல' மோதல்! - காவல்துறை அதிகாரிகள் அறிவுரை!

இதுகுறித்து வீட்டிலும் மாணவி சொல்லி அழுதுள்ளார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதால் மூடி மறைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்திருக்கிறார் அந்த ஆசிரியர். மாணவியை ஸ்கூல் ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லையும் அளித்துள்ளதாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் அதை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஜெய் பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!” – சீமான் புகழாரம்..!

Lekha Shree

அழியாத மனிதநேயம் – ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

Lekha Shree

20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் போராட்டம்

Tamil Mint

கோயில்…மசூதி…சர்ச்…ஆல் டவுண்டிங்கில் சசிகலா…!

Devaraj

தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

கொண்டாட்டங்களை காண யாரும் நேரில் வராதீங்க: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.!

mani maran

அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Mint

கொவிட்-19: அதிக பரிசோதனைகள் மூலம் ஆபத்திலிருந்து மீண்டு வரும் தமிழகம்

Tamil Mint

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil

அதிமுகவில் உட்கட்சி பூசல்

Tamil Mint

மருமகனுக்கு செருப்படி கொடுத்த மாமியார்… நடுரோட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint