19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு..! மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு..!


தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பழிக்கு வருவதால் ஆசிரியர்கள் அவர்களை உற்சாகப்படுத்த பலூன்கள் கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் மூடப்பட்டன.

Also Read  அன்புமணி ராமதாஸின் 9 கேள்விகள்... பதிலளித்த நடிகர் சூர்யா..!

அதையடுத்து கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க படாமலேயே இருந்தது.

அதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் வரவேற்க எம்.பி. எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், “விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பது போல் வரவேற்பு கொடுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Also Read  இன்று பிரதோஷம்: ஆன்லைன் மூலம் சிவ தரிசனம் செய்யலாம்

அதன்படி மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழை பள்ளி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

அதே போல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read  தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? - ஜெயக்குமார் விமர்சனம்..!

மேலும் அவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலிலேயே உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்ளிட்ட செயல்பாடுகளை பள்ளி திறந்ததும் 10 முதல் 15 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பள்ளிக்கு வர அவசியம் இல்லை என்றும் பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் வழிக் கல்வியையும் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நேரடி வகுப்புகள் தொடங்கினாலும் தீபாவளிக்குப் பிறகு தான் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜகவின் சக்கரவியூகம்: கு க செல்வம் மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்

Tamil Mint

தமிழக அரசு அறிவிக்கப்போகும் சென்னை சங்கமம் குழுவில் எம்.பி கனிமொழி ஒதுக்கப்படுகிறாரா?

Lekha Shree

ராஜேஷ் தாஸ்-க்கு உதவும் எஸ்.பி.! மிரட்டப்படும் அதிகாரிகள்! சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்!

Jaya Thilagan

சீமானுக்கு எதிராக தம்பி ஒருவர் போட்ட வீடியோ – ட்ரெண்டான #சீமான்ணேரூம்போட்டியா ஹாஷ்டேக்

Devaraj

“ராயபுரம் மக்கள் அனைவருக்கும் நன்றி” – ஜெயக்குமார்

Lekha Shree

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Tamil Mint

10 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை…!

sathya suganthi

ஊரக உள்ளாட்சித் தேர்தல்… வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி..!

suma lekha

ATM-ல் கொள்ளையடித்த வங்கி ஊழியர் – சிக்கியது இப்படித்தான்!

Lekha Shree

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

“உங்கள் பெருந்தன்மையை குறைக்கிறது” – செல்லூர் ராஜு குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்..!

Lekha Shree

தமிழகத்தில் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்.!

suma lekha