a

அதென்ன 54 – கொல்கத்தா அணி கிளப்பிய சர்ச்சை!


அகமதாபாத்தில் நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. அப்போது களத்திற்கு வெளியே இருந்த கொல்கத்தா அணி பயிற்சியாளர்கள் 54 என்ற குறியீட்டை வீரர்கள் கண்ணில் படுமாறு வைத்திருந்தனர்.

இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பான நிலையில் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த குறியீடு எதற்காக என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கொல்கத்தா அணியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் மட்டும் தான் இது போன்ற code wordகள் பயன்படுத்துவார்கள் என கூறிய விரேந்தர் சேவாக், வெளியிலிருந்து ஆடுகளத்தில் மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் பிறகு யார் வேண்டுமானாலும் கேப்டனாக இருக்கலாமே என சாடினார்.

Also Read  ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் நடராஜன்!

உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயான் மார்கனின் பங்களிப்பு வேறு என்னவாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆடுகளத்திற்கு வெளியே இருந்து முற்றிலும் உதவியை பெறக்கூடாது என கூறவில்லை என விளக்கமளித்த விரேந்திர சேவாக்ஸ, யாரிடம் வேண்டுமானாலும் அறிவுரை கேட்டுக் கொள்ளலாம் என்றும் ஆனால் முடிவு எடுப்பது கேப்டனின் கையில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  துவம்சம் செய்த படிக்கல் - விராட் கோலி ஜோடி : ராஜஸ்தான் அணி மீண்டும் தோல்வி

இதற்கு உதாரணமாக எம்எஸ் தோனியை குறிப்பிட்ட சேவாக் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப செயல்படுவதில் தோனி கில்லாடி என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆடுகளத்திற்கு வெளியே இருந்து உதவிகள் பெற்றாலும் கேப்டனின் யுக்தி தான் அதி முக்கியம் எனவும் சேவாக் குறிப்பிட்டுள்ளார்

Also Read  தோனிக்கு 12 லட்சம் அபராதம் - சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியா வாருங்கள் – ஐபிஎல் வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் அட்வைஸ்

Lekha Shree

ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் – சொல்வது யார் தெரியுமா?

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு – சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?

Jaya Thilagan

பொல்லார்டை ஒப்பிட்டு தமிழக வீரரை பாராட்டிய அனில் கும்ப்ளே!

Jaya Thilagan

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தளர்வு!

Jaya Thilagan

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

உட்றாதீங்க எப்போ – வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

தோனிக்கு 12 லட்சம் அபராதம் – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

Jaya Thilagan

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் – ஸ்ரேயாஸ் அய்யர் தொடரிலிருந்து விலகல், ஐபிஎல் இல் விளையாடுவது சந்தேகம்!

HariHara Suthan