a

‘கடல் சளி’ – காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!


கடல் சளி என்பது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல வேதனை அடைய வேண்டிய ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் உடலின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதனால் பெரும்பாலும் சளி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போல தான் புவி வெப்பமாவதால் கடல் சளி உண்டாகிறது என கூறுகிறார்கள். சுமார் 70 விழுக்காடு கடலினால் ஆனது நம் புவி.

அதாவது நான்கில் மூன்று பங்கு. இதில் உள்ள 96.5 விழுக்காடு நீரை தன்னகத்தே கொண்டுள்ளது. புவி வெப்பமாதல் நீர் சூடாகி பாசி போன்ற நுண்தாவாரங்கள் ஊட்டம் அளிக்கப்படுவதால் கடல் சளி ஏற்படுகிறது.

Also Read  அமெரிக்கா: அதிபர் டிரம்ப் கொரோனா நிவாரணத்திற்கு ஒப்புதல்

பச்சை-சாம்பல் வண்ண முடைய கோழை போன்ற கரிம பொருளான இந்த கடல் சளி பல்கிப்பெருகி கடலின் மேற்பரப்பை அடைத்து கொள்வதுடன் கடலின் அடிப்பகுதியை நோக்கியும் சில அடி முதல் பல கிலோ மீட்டர் வரை அடர்த்தியாக வாழும் திறன் கொண்டது.

இந்த குறைபாட்டினால் ஆபத்து இல்லை என்றாலும் கூட வைரஸ், பாக்டீரியா போன்ற பல ஆபத்தான நுண்ணுயிர்களை கவர்ந்து அவற்றின் கூடாரமாக இது கடலில் மிதக்கிறது.

இப்படி கடலில் மேற்பரப்பை அடைத்து வரும் சளியினால் கடலில் உட்புகும் ஆக்சிஜன் தடுக்கப்பட்டு கடலின் வெப்பநிலை கூடுகிறது. இதனால், கடல்வாழ் உயிர்கள் மடிந்து விடுகின்றன.

இவ்வாறு செத்து மிதக்கும் கடல்வாழ் உயிரினங்களால் கடலின் சூழ்நிலை மேலும் சீர் கெடுகிறது. மீன்வளம் குறைவதால் அதனைச் சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

Also Read  அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் ஜோ பைடன்... அணு ஆயுத பெட்டியை பைடனிடம் ஒப்படைக்கும் டிரம்ப்!

இப்படி சூழலியல் சீர்கேட்டினால் மனிதர்களுக்கும் சில தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

இது நீர் நிலைகளில் நிகழும் அரிதான நிகழ்வுதான் எனினும் தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலை அப்படிப்பட்டது இல்லை. கருங்கடலையும் ஏசியன் கடலையும் இணைக்கும்மர்மரா பகுதியில் இந்த கடல் சளி எனும் பிரச்சினை உண்டாகியுள்ளது.

Also Read  அனல் காற்று அபாயம் : 12 - 4 மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தொற்றானது கடந்த காலத்தை விட அதிகமாக இருப்பதால் இதை கடல் சளி பெருவெடிப்பு என்று கூறுகின்றனர்.

மேலும் கருங்கடலிலும் இதன் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டன. கடலில் மிக அதிக அளவில் கலக்கப்படும் கழிவுகளால் மாசு அடைந்த கடல் நீர் காலநிலை மாற்றத்தோடு கைகோர்த்து இந்த பெருவெடிப்பு நிகழ்ந்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிராஃபிக் அதிகம் உள்ள சாலையில் கார் ஓட்டிச்சென்ற 5 வயது சிறுவன்; பெற்றோரைத் தேடும் போலீஸ்! – வீடியோ

Tamil Mint

உலகின் மிகப் பழமையான மது ஆலை கண்டுபிடிப்பு – 5,000 ஆண்டுகள் பழமையானது என கணிப்பு

Tamil Mint

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்டும் அபுதாபி அரசு….

VIGNESH PERUMAL

டிரம்புக்கு எதிராக வழக்குகள் வருமா?

Tamil Mint

கேட்வாக் செய்த வெள்ளாடுகள்…! துருக்கியில் நடந்த கண்கவர் அழகுப்போட்டி…!

Devaraj

நியூ யார்க்கில் பிறந்த அரிய வகை வெள்ளை கங்காரு! – க்யூட் புகைப்படம்

Tamil Mint

பெற்ற தாயை கொன்று சமைத்து உண்ட கொடூரன்…! ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்…!

Devaraj

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

வயதான எஜமானருக்காக தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நாய்!

Tamil Mint

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Devaraj

“அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

Tamil Mint

அமெரிக்க அதிபர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

Tamil Mint