“ஜெய் பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி!” – சீமான் புகழாரம்..!


உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து மொழிகளில் அமேசான் தளத்தில் வெளியான இந்தப்படம் பழங்குடி மக்களின் உணர்வுகளையும் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவத்தையும் தத்ரூபமாக சித்தரித்து இருந்தது.

இந்த படத்தை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் முதல் அப்பால் பிரபலங்கள் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்தையும் பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஜெய் பீம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி” என புகழாரம் சூட்டியுள்ளார்.

Also Read  ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுதினம்: அதிமுக, அமமுகவினர் அஞ்சலி…!

ஜெய் பீம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டு மடலில், “தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு ஒப்பற்ற திரை காவியமாக ஜெய்பீம் வந்து இருப்பதாக கருதுகிறேன்.

அதிகாரத்தின் கூர் முனைகள் எளிய மக்களின் வாழ்வினை கோரமாகக் குத்திக் கிழிக்க பார்க்க இயலா அவலங்களை படமாக ஆவணப்படுத்தி, பாடமாக மாற்றி இருக்கின்ற இத்திரைப்படத்தின் இயக்குனர் தம்பி ஞானவேல் அவர்களை உச்சிமுகர்ந்து பாராட்டுகிறேன்.

தனது வழக்கறிஞர் பணியிலும் நீதியரசர் ஆன பிறகும் தனது நேயமிக்க செயல்பாடுகளாலும் நேர்மை செய்த பெருமக்கள் நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா சந்துரு அவர்களின் பாத்திரத்தை ஏற்று அப்படியே திரையில் நிறுத்தி, விழி, மொழி, கண்ணசைவு, ஆற்றாமை, கோபம், பரிதவிப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி தேர்ந்த நடிப்பால் நெகிழச் செய்திருக்கிறார் தம்பி சூர்யா.

தம்பி மணிகண்டன், கதைநாயகி தங்கை லிஜோமோல் ஜோஸ் ஆகிய இருவரும் அளவற்ற திறமையை வெளிப்படுத்தி இயல்பான நடிப்பினால் இக்கலை படைப்பிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

Also Read  ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

எனது அன்பு சகோதரன் பிரகாஷ்ராஜ் தனது தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பினால் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் எனது அன்பு இளவல் தமிழ் அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

எளியவர்களுக்கு எதிரான எதேச்சதிகார அரசியல் வரம்புமீறலை தடுக்க இருக்கும் ஒரே வழியான நீதித்துறையின் தேவையை உயிர்ப்போடு திரைமொழியில் காட்ட உதவியை இருளர் பழங்குடி உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Also Read  ஜெ.,வின் வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க தீபா மனு..!

சட்டத்தைப் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டும் உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரு வரலாற்றுப் பெரும் படைப்பாகும்.

பேசாப் பொருளைப் பேச துணிந்து ஆதிகுடிகள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளை உண்மையாக பதிவுசெய்து உலகமறிய வழங்கி இருக்கிற என் உயிர் தம்பி சூர்யா அவர்களையும் அவரது இணையர் ஜோதிகா அவர்களையும் மீண்டும் மனதார பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

ஜெய்பீம் ஒவ்வொரு மனிதனும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் மட்டுமல்ல; அதிகாரத்திற்கு எதிராகவும் ஆதிக்கங்களுக்கு எதிராகவும் உயிர்த்திருக்கிற போர்க்கருவி!” என குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சீயான்60’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

Lekha Shree

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், சஞ்ஜீப் பானர்ஜி.

Tamil Mint

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் காலமானார்…!

Lekha Shree

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை..!

Lekha Shree

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

Tamil Mint

குடியரசு தின வாழ்த்து: தவறான தேசியக் கொடியை பதிவிட்ட நடிகை குஷ்பு – மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவு!

Tamil Mint

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்…!

Lekha Shree

இ-பதிவு செய்வதற்கான பட்டியலில் திருமணமும் சேர்ப்பு

sathya suganthi

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு..!

Lekha Shree

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint