“இசுலாமியரென்பதால் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா?” – சீமான் கண்டனம்..!


போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சொகுசு கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு பலமுறை ஜாமீனுக்கு முயன்றும் ஆர்யன் கானின் ஜாமீன் மறுக்கப்பட்டது. அவருக்கு பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்த வழக்கில் அதிகார அத்துமீறலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read  உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே அவரை குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடிகள் வரை பேரம் பேசப்பட்டன என வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆர்யன் கானை பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்,பொருள் தடுப்பு பிரிவு போதை விருந்து நடந்ததாக சொல்லப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

தவிர்க்க இயலா பல்வேறு ஐயங்களும் விடை தெரியா கேள்விகளும் எழும் நிலையில் ஷாருக்கானின் மகன் என்பதாலேயே இந்த வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை.

குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் 2,988.21 கிலோ எடையும் 21,000 கோடியிலான சந்தை மதிப்பும் கொண்ட போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆர்வம் காட்டாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கானை கைது செய்த வழக்கில் காட்டும் முனைப்பும் தீவிரமும் பாஜக அரசின் அப்பட்டமான அதிகார தலையீட்டையும் அரசியல் லாப நட்ட கணக்கீடுகளையுமே காட்டுகிறது.

Also Read  "எனக்கு ஆண்மை இல்லை!" - வாக்குமூலம் அளித்த சிவசங்கர் பாபா?

முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் பின்புலத்தில் உள்ள வலைப்பின்னல் குறித்தும் கடத்தல் பெரும்புள்ளி குறித்தும் வாய் திறக்காது, அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைப் பாய்ச்சாத இந்நாட்டின் ஆட்சியாளர்கள் ஆர்யன் கான் வழக்கில் காட்டும் அதீத கவனம் இயல்பானது அல்ல.

பழங்குடி மக்களுக்காக போராடிய பெருமகன் ஐயா ஸ்டோன் சுவாமி அவர்களை பொய்யான வழக்கில் கொடுஞ்சட்டத்தை கொண்டு பிணைத்து அவரை சிறைக்குள்ளேயே சாகடித்த இந்நாட்டின் ஆட்சியாளர்கள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும் பழிவாங்கல் போக்குக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்; எவரை வேண்டுமானாலும் கைது செய்வார்கள் என்பது வெளிப்படையானது.

Also Read  திண்டுக்கல் ஐ.லியோனி பதவியேற்பு விழா திடீரென ரத்து…!

அந்தவகையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியதற்காக உமர் காலித், சர்ச்சில் இமான், அப்துல் காலித், சைபி, இஷ்ரத் ஜான், மீரான் ஹைதர், குல்பீ ஷா, ஷீபா உர் ரகுமான் போன்றவர்களையும் உத்தரபிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சித்திக் கப்பனையும் இஸ்லாமியர் எனும் ஒற்றை காரணத்திற்காகவே ஊபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தி வதைத்து வருவது அரசபயங்கரவாதத்தின் உச்சமாகும்.

மதச்சார்பின்மை எனும் மகத்தான கோட்பாட்டினை குறைத்து சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிளந்து, பிரித்து ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது. பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Lekha Shree

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம் – மின்வாரியம்

sathya suganthi

கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint

கோவிஷீல்டு தடுப்பூசி… ஆயுள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு! ஆய்வில் அசத்தல் தகவல்..!

Lekha Shree

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு – ஆலோசனை கமிட்டி உருவாக்கம்!

Lekha Shree