மிரட்டும் சீமான் மற்றும் ஹரிநாடார்..நடிகை விஜயலட்சுமி புகாரால் பரபரப்பு..!


சீமான் குறித்து புகார் அளித்து வந்த நடிகை விஜயலட்சுமி, தற்போது ஹரி நாடார் பக்கம் தாவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் சமூக வலைத்தளங்களில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார்.

Also Read  தனியாரிடம் அதிகபட்சமாக ரூ.7க்கு மின்சாரத்தை தமிழக அரசு வாங்குவது ஏன்? - திமுக கேள்வி...!

இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பல்வேறு கருத்துக்களும் எழுந்தது.

இப்படி ஒரு நிலையில் சீமான் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று சோசியல் மீடியாவில் விஜயலட்சுமி தற்கொலை செய்ய முயன்ற வீடியோவை 2020 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிட்டு இருந்தார். பின் விஜயலட்சுமியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also Read  விஷாலுக்கு ரூ.2கோடி கட்ட வருமானவரித்துறை நோட்டீஸ்...?! டிடிஎஸ் கட்டாமல் மோசடியா?! தப்பிக்க பெண் ஊழியர் மீது கையாடல் புகாரா?

மேலும், விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து எனக்கு நியாயம் வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார். உடல்நலம் சரியாக நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேறி விட்டதாகவும் தன்னை சீமான், ஹரிநாடார் இருவரும் சேர்ந்து மிரட்டுவதாகவும் கூறி இருந்தார். உடனே சீமான், ஹரிநாடார் இருவரையும் கைது செய்ய வேண்டும் என விஜயலட்சுமி போராட்டம் செய்து இருக்கிறார்.அதோடு இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் தற்போது மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கிறார் ஹரிநாடார். இப்படி ஒரு நிலையில் விஜயலட்சுமி ஹரி நாடாரை கைது செய்யவேண்டும் என்று புகார் அளித்ததில் இருந்து பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் போலீஸ் ஹரி நாடாரை கைது செய்ய கடிதம் அனுப்பியுள்ளது.

Also Read  தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூட்டணி தான் ம.நீ.ம. தோல்விக்கு காரணம்…! பொன்ராஜ் விளக்கம்

sathya suganthi

” சசிகலா ஜெயலிதாவிற்கு துரோகம் செய்யமாட்டார் ” – இல. கணேசன் பேட்டி

Tamil Mint

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

“தடுப்பூசி போட்டிருந்தால் தான் மதுபானம்” – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

Lekha Shree

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint

சென்னை உள்பட சில மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி : முழு விவரம் இதோ…!

sathya suganthi

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Lekha Shree

முதுமலையில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

sathya suganthi

அரசு அதிகாரிக்கு இவ்வளவு சொத்தா? அம்பலமான அதிர்ச்சித் தகவல்…

Tamil Mint

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பு 97 ஆக உயர்வு…!

Devaraj

ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint